Header Ads Widget

Responsive Advertisement

நாய்க்குட்டி (சிறுகதை)

ஒரு பட்டணத்திலே இரண்டு நாய்க்குட்டிகள் வாழ்ந்து வந்தன. ஒரு நாய் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்தது. இந்த நாய்க்கு டாமி என்று பெயர். இந்த நாய்க்கு வீட்டு எஜமானர் தினமும் நல்ல சத்துள்ள ஆகாரங்களை கொடுத்து வந்தார். வீட்டில் இருப்பவர்கள் டாமி மீது நல்ல பாசத்தையும் அன்பையும் காட்டி வளர்த்து வந்தார்கள்.
மற்றொரு நாய் டாமி வசித்த அதே தெருவில் வசித்த நாய் அதன் பெயர் ஜிம்மி, அந்த நாய் ஒரு அனாதை, அது அந்த வீதியில் இருக்கும வீட்டினர் தினமும் மிச்சமானதைப் போடுவதைச் சாப்பிட்டு வளர்ந்தது. சில சமயம் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் போய் விடும். இப்படி மனம் போன போக்கில் சுற்றிக்கொண்டும், சரியான பராமரிப்பு இன்றியும் வாழ்ந்து வந்தது
டாமிக்கு ஜிம்மியைப் பார்த்து அது போல இஷ்டம் போல் சுற்றித்திரிய வேண்டும் என்ற ஆசை உண்டானது. ஆகவே சரியான நேரம் பார்த்து தன் எஜமானரை ஏமாற்றி விட்டு இஷ்டம் போல வாழ தன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டது. தன் ஆசை நிறைவேறி விட்டதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியோடு அங்கும் இங்கும் ஓடியது, தன்னைப் பார்த்து பயந்தவர்களைப் பார்த்துக் குறைத்து அவர்களை இன்னும் அதிகமாக பயமுறுத்தி மகிழ்ந்தது.

மதிய வேளை வந்தவுடன் டாமிக்கு பசி உண்டானது. உணவு தேடி அலைந்தது அப்போது அங்கே இருந்த குப்பைத் தொட்டி ஒன்றில் ஒரு எலும்புத்துண்டு கிடைத்தது. அதை கவ்விய போது. அந்த எலும்பு அதன் தாடையைக் குத்தியது. இதனால் அதன் வாயிலிருந்து இரத்தம் வந்தது. ஆனால் அது தன்னுடைய இரத்தம் என்று தெரியாமல். அந்த இரத்ததை சுவைக்க ஆரம்பித்தது.
அதோடு கூட நிற்காமல் எவ்வளவு இன்பமான உணவு இது என் எஜமானர் இப்படிப்பட்ட நல்ல உணவை ஒரு நாளும் கொடுத்த்தில்லை என்று தன் எஜமானரைக் குறை கூறிக்கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல வலி அதிகமானது இதனால் டாமி வலியில் துடித்தது. இதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் போனதால் மிகவும் அழுது தவித்த்து. தன் செல்ல நாய்க்குட்டியைக் காணாத எஜமானரும் அவரது வீட்டில் உள்ளவர்களும் துடி துடித்துப்போய், யாராவது எங்கள் டாமியைப் பார்த்தீர்களா? என்று கேட்டுக்கொண்டே எல்லாத் தெருவிலும் சுற்றினார்கள். அப்போது டாமி இரத்தம் வழிந்த வாயோடு வலியில் அழுது கொண்டு தன் எஜமானரின் காலுக்கடியில் வந்து நின்றது. அதைப்பார்த்த எஜமானர் டாமியை அனைத்துக் கொண்டு அதைச் செல்லமாகக் கடிந்து கொண்டு மருத்துவ மனைக்குச் சென்று அதற்கு மருந்து போட்டார். டாமி சுகமானது.

இப்போதெல்லாம் டாமிக்கு ஜிம்மியைப் போல வெளியே போய் தன் இஷ்டம் போல சுற்றவேண்டும் என்ற என்னமே வருவதில்லை
அன்பு சகோதரனே சகோதரியே நீங்களும் ஒருவேளை நம் இயேசு கிறிஸ்து தரும் இரட்சிப்பை அடைந்த பின்பு அவருடைய பாதுகாப்பு எனக்கு போர் அடித்துவிட்டது. ஆகவே நான் மற்ற நண்பர்களைப் போல ஜாலியாக இருப்பேன். குடி, பீடி சிகரெட், சினிமா, மற்ற உலகக் காரியங்களில் மகிழலாம் என்று நினைக்கலாம். அல்லது அப்படிப்பட்ட நிலையில் விழுந்து இருக்கலாம். இத்தகைய மகிழ்ச்சிகள் போலியானவைகள் ஆகும். இவைகள் நம்முடைய நாய்குட்டி தன் இரத்ததையே சுவைத்தது போல நம்முடைய சரீர ஆரோக்கியத்தையே நமக்கு இன்பமாகத் தருகிறது.
நீ ஒருவேளை இப்படிப்பட்ட பாவத்தில் விழுந்து உன் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு டாமியைப் போல அழுது கொண்டு இருக்கலாம். கவலைப்படாதே உன்னுடைய எஜமானர் இயேசு கிறிஸ்து உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறார். இன்றே மனம் திரும்பு உன் பாவ வாழ்க்கையிலிருந்து இன்றே அவர் விடுவிப்பார். நித்தியமான மன மகிழ்ச்சியை உனக்குக் கொடுப்பார் ஆமென்.

Post a Comment

3 Comments

 1. இன்பம் பெண்களிடத்தில்தான் இருக்கிறது என்கிற myth ஐப் போக்க ரமணர் சொன்ன தத்துவம் இது. சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்.

  http://kgjawarlal.wordpress.com

  ReplyDelete
 2. நன்றி நண்பரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக...

  ReplyDelete
 3. சிறிய கதைக்குள் பெரிய சத்தியம். கதை சுவார்சியமாக இருந்தது. நன்றி நண்பரே!

  ReplyDelete