Header Ads Widget

Responsive Advertisement

நாத்திகருக்கு ஓர் பகீரங்கக் கடிதம்

அன்பானவர்களே திவ்யா என்றொரு சகோதரி சில நாட்களாக பைபிளில் பூமி தட்டையாக இருக்கிறது என்று எழுதியிருப்பதாகவும், அதன் பின்பு கலிலியோ கலிலி பூமி உருண்டை என்று கண்டுபிடித்து சொன்ன பின்பு பைபிளில் திருத்தி அமைக்கப்பட்டதாகவும் இது போல 23 முறைகள் பைபிள் திருத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்கள். இதை இங்கே படிக்கலாம்.

அந்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுத்தும், நாத்திகத்தில் உள்ள ஓட்டைகளுக்கு அவர் என்ன சொல்லப் போகிறார் என்பது பற்றியும் ஒரு கடித வடிவில் அவருக்கு விளக்கமளிக்கிறேன்.

அன்பு சகோதரி, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள். முதலாவது கலிலியோ கலிலி விசயத்துக்கு வருகிறேன். இவர் பெப்ரவரி 15, 1564 - ஜனவரி 8, 1642 வரை வாழ்ந்தவர், அதாவது 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். அப்படியானால் நீங்கள் சொன்னது போன்ற பைபிள் திருத்தப்பட்டது அதற்கு பின்பு தான் நிகழ்ந்திருக்க வேண்டும். அப்படியானால் அதற்கான ஆதாரங்கள் திரட்டுவது எளிதே அந்த கால கட்டத்தில் தமிழ் மொழிவரை வேதாகமங்கள் கிடைக்கப்பெற ஆரம்பித்தனவே?

பைபிள் திருத்தப்படவில்லை நம்பகத்தண்மை வாய்ந்தது என்பதற்காக ஆதாரம்

பொதுவாக பண்டைய நூல்களில் நம்பகத் தன்மையை கணக்கில் கொள்ள "முல பிரதி விமர்சன அறிவியல்" என்ற முறையின் படி தற்கால அறிவியலாள்ர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.

அதாவது ஒரு நூல் ஒரே கருத்துடன் எத்தனை பிரதிகள் கிடைக்கிறதோ(ஒரே இடத்த்தில் அல்ல பரவலாக வெவ்வேறு இடங்களில்), எழுதப்பட்ட காலத்துக்கும் கிடைக்கப்பட்ட பிரதியின் கால இடைவெளியும் குறைவாக உள்ளதோ, அந்த நூல் திருத்தப்படவில்லை என்பதற்கான உறுதியையும் நம்பகத்தன்மைவாய்ந்தது இடைச்செறுகல் இல்லை என்பதையும் அறியலாம் என்று வரையருத்திருக்கிறார்கள்.

இந்த மூல பிரதி விமர்சன அறிவியலின் படி பைபிள் கி.மு 3400 கி.பி - 100 எழுதப்பட்டுள்ளதையும், தற்போது நமக்கு கிடைக்கப்பெறும் முழு முதல் அச்சுப் பிரதி கி.பி 130  ஆண்டைச் சேர்ந்ததாகவும், பைபிளின் முழு அச்சுப் பிரதிகள் கி.பி 350 நூற்றாண்டிலிருந்து கிடைத்திருக்கிறது, மேலும் கிரேக்கு கிரேக்கு மொழியில் 5000+ பிரதிகள் லத்தீன் மொழியில் 10,000 பிரதிகள், பிற மொழிகள் 9300 பிரதிகள். இவை யாவும் இன்றைக்கும் இலண்டன் அருங்காட்சியகத்துக்கு சென்றால் நீங்கள் பார்க்கலாம். இவை எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் காலத்துக்கும் நமக்கு கிடைத்திருக்கும் பிரதியின் காலத்துக்கும் வித்தியாசம் வெறும் 300 ஆண்டுகளே அது மட்டுமல்ல கி.பி.130 என தேதியிடப்பட்ட யோவான் சுவிஷேசத்தின் ஒரு துண்டு அச்சு பிரதியும் நமக்கு கிடைத்துள்ளது (இன்னும் விளக்கமாக படிக்க இங்கே சொடுக்கவும்)

இப்போது சொல்லுங்கள் 17 நூற்றாண்டில் வாழ்ந்த மனிதனின் சொல் கேட்டு 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்கள் எப்படி தங்கள் அச்சு பிரதிகளை மற்றி எழுத முடியும்?

அல்லது கிடைக்கப் பெற்றிருக்கும் ஆயிரக்கணக்கான பிரதிகள் பொய் என்று சொல்லிவிடுவீர்களா? அல்லது மூலப் பிரதி விமர்சன அறிவியலே தவறு என்று சொல்லிவிடுவீர்களா? அப்படி சொன்னால் தாங்கள் என்ன முறையில் ஆராய்ந்தீர்கள் என்பதையும் நீங்கள் சொல்ல வேண்டும்

இந்த முறைப்படி எழுதப்பட்ட சீஷரின் வரலாறு உட்பட அனைத்தும் பொய் என்று வாதிட வேண்டும் உங்கள் ஆய்வுக்கட்டுரையில் இவைகளையும் விளக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

சரி இப்பொழுது நம்முடைய விசயத்துக்கு வருவோம், சமீபத்தில் வெளிவந்த பெரியார் திரைப்படத்தில் வைக்கம் போராட்டம் போன்ற காட்சியில்

நீங்கள் மட்டும் விந்தினில் இருந்து பிறந்தவர்கள்
நாங்கள் மட்டும் எச்சிலிருந்து பிறந்தவர்களா?


என்று உண்ர்சிகரமான ஒரு பார்ப்பாணியத்துக்கு எதிரான ஒரு உரிமைக் குரல் ஒலிக்கும், பெரியாரின் பேரன்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டதால் இதைக் கேட்கிறேன் உங்கள் சுயமரியாதை இவ்வளவு குறுகியதா? அல்லது பார்ப்பானியர்களிடம் தான் உங்களுக்கு சுய மரியாதையா?

காசுக்கு மதம் மாறும் கூட்டம் என்று எங்களைச் சொல்லும் நீங்கள் குரங்குக்கு பிறந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ள எவ்வளவு வாங்கினீர்கள்?

பைபிளில் கடவுளின் கைகளால் மனிதனாகவே உருவாக்கப்பட்டேன் என்று நான் நம்புகிறேன் என்று சொன்னால் என்னை பைத்தியகாரன் என்று சொல்லும் தாங்கள், குரங்கிலிருந்து பிறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்களே உங்களை நான் ஏன் அஃறினையில் அழைக்கக் கூடாது.

சரி உங்கள் முன்னோர்கள் இன்னும் சாலை ஓர மரங்களிலும், காடுகளிலும்  சுயமரியாதை இல்லாமல் அம்மனமாக அலைந்து கொண்டிருக்க நீங்கள் ஏன் நாட்டுக்கு ஓடிவந்து இப்படி சுயமரியாதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இதற்கும் உங்கள் ஆய்வுக்கட்டுரையில் பதிலை எதிர்பார்க்கிறேன்

மற்றவை உங்கள் பதில் கண்டு

நன்றி

இப்படிக்கு
ராஜ்குமார்

Post a Comment

4 Comments

  1. //பைபிளில் கடவுளின் கைகளால் மனிதனாகவே உருவாக்கப்பட்டேன் என்று நான் நம்புகிறேன் என்று சொன்னால் என்னை பைத்தியகாரன் என்று சொல்லும் தாங்கள், குரங்கிலிருந்து பிறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்களே உங்களை நான் ஏன் அஃறினையில் அழைக்கக் கூடாது. ///

    கலகமேற்படுத்தும் வார்த்தைகள் வேண்டாம் நண்பரே...

    ReplyDelete
  2. உங்கள் ஆலோசனைக்கு நன்றி சகோதரரே, முதலில் அந்த சகோதரிதான் அநாகரீகமான வார்த்தைகளை பதிவு செய்தார்.

    நானாக விரும்பி இத்தகைய பதிவுகளை இடவில்லை, ஆனால் கேட்கவேண்டிய சூழ்நிலை.

    இந்த பதிவு யார் மனதையாகிலும் புன்படுத்த்தியிருக்குமானால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்துக் காத்துக்கொள்வாராக....

    ReplyDelete
  3. உங்கள் கேள்விகளுக்கு நான் விரைவில் என்ன கட்டுரையை சமர்பிக்கிறேன் என்று ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன் .மேலும் நீங்கள் இரட்சிப்பு என்று குறிப்பிட்ட அனைத்தும் நீங்கள் கற்பனை உலகத்தில் வாழ்கிறீர்கள் என்பதை நிரூபிக்கிறது.

    \\இதை குறித்து ஒரு ஆதாரப்பூர்வமான பதிலை கட்டுரையாக உங்கள் தளத்திற்கு விரைவில் சமர்பிக்கிறேன்.தற்பொழுது அது குறித்த ஆய்வுக்கட்டுரை தயாரித்து வருகிறேன்.முடிவடைய சில மாத காலங்கள் தேவைப்படும் ஆனாலும் அதை விரைவில் முடித்து தவறாமல் உங்கள் தளத்திற்கு அனுப்புகிறேன்.\\


    //பைபிளில் கடவுளின் கைகளால் மனிதனாகவே உருவாக்கப்பட்டேன் என்று நான் நம்புகிறேன் என்று சொன்னால் என்னை பைத்தியகாரன் என்று சொல்லும் தாங்கள், குரங்கிலிருந்து பிறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்களே உங்களை நான் ஏன் அஃறினையில் அழைக்கக் கூடாது. ///

    அறிவியல் பார்வையில் மனிதனும் ஒரு மிருக இனமே.எனவே நீங்கள் என்னை அஃறினையில் அழைப்பதை பற்றி கவலை இல்லை.


    நீங்கள் எனக்கு கேட்டிருக்கும் அணைத்து கேள்விகளுக்கும் என் கட்டுரையில் பதில் இருக்கிறது காத்திருங்கள்



    இந்த இணையத்தை ஒரு முறை படித்து பார்க்கவும்

    http://www.religionisbullshit.net/christianquestion.php

    http://en.wikipedia.org/wiki/Flat_earth

    மேலும் பைபிள் 23 முறை திருத்தப்பட்டது குறித்து மேலோட்டமான தகவல்கள்

    The Synopsis of "Jesus Lived In India" by Holger Kersten was written by Dr Ramesh Manocha & Anna Potts.

    இந்த புத்தகத்தில் காணக்கிடைக்கிறது மேலும் அது குறித்த ஆழமான தகவல்களை தேடிவருகிறேன்.

    ReplyDelete
  4. இங்கே ஆய்வு கட்டுரை சமர்பிப்பதாகச் சொல்லிச் சென்ற அன்பு சகோதரி திவ்யா ஓராண்டுகள் ஆகியும் இன்னும் வரவில்லை வந்து பதில் தரவில்லை, அவரைக் கண்டுபிடிப்பவர்கள் உடனடியாக வந்து தங்கள் பதிலைத் தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete