Header Ads Widget

Responsive Advertisement

எங்கும் புகழ் யேசு ராசனுக்கே.. Tamil Christian Song Video & Lyrics

கீர்த்தனை 333

பல்லவி

எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே !

அனுபல்லவி 
உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும் 
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்,- எங்கும்

சரணங்கள் 
ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும் 
அதை அறிந்து துதி செய்குவீர் ; 
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி யேசுவுக்கிதயம் தந்திடுவீர் .- எங்கும்

கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு
கடன் பட்டவர் கண் திறக்கவே;
பல்வலி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் .-எங்கும்

தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும் 
தழைப்பதல்லோ தகுந்த கல்வி ?
பாழுந் துர்க்குணமும் பாவச் செய்கையாவும் 
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ ?-எங்கும்

சுத்த சுவிஷேசம் துரிதமாய்ச் செல்ல
தூதர் நீங்களே தூயன் வீரரே ;
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக் 
கருணை நிறை வசனம் கற்றிடுவீர் -எங்கும் 

Post a Comment

0 Comments