Header Ads Widget

Responsive Advertisement

மனித ஆத்மாவின் அடிப்படை இயல்பு என்ன?

அன்பானவர்களே, படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத் தொடரில் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆண்டவருடைய நாமம் மகிமையடையட்டும். இன்று நாம் இந்த கட்டுரைத் தொடரில் மிக முக்கியமான ஒரு கட்டத்துக்கு வந்திருக்கிறோம். முதலில் மனிதனின் மூன்று வெவ்வேறு நிலைகளைக் குறித்து அறிந்து கொள்வோம். இந்த உலகில் மனிதன் மட்டுமல்ல எந்த ஒரு பொருளுமே மூன்று முக்கிய நிலைகளை உடையது என்று நாம் அறிவோம், இன்னும் சற்று விளக்கமாக சொன்னால் திட, திரவ, வாயு, என்ற மூன்று நிலைகள் ஆகும்.

உலகில் வாயு நிலையில் உள்ள ஆக்சிஜன், ஹைட்ரஜன், போன்ற கண்ணுக்கு புலனாகாத பொருட்களாக இருந்தாலும் சரி, இரும்பு, தங்கம், செம்பு போன்ற உலோகங்களாக இருந்தாலும் சரி, அல்லது தண்ணீர் போன்ற திரவ நிலை பொருட்களாக இருந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல‌

அதுபோலதான் மனிதனுக்கும் ஆவி, ஆத்துமா, சரீரம், என்ற மூன்று பரினாமங்கள் உள்ளன. இதில் சரீரம் என்பது நம் கண்காளால் பார்த்தும், தொட்டும் உண்ரந்து கொள்ளக்கூடிய நம்முடைய மாம்சம் என்பது நம் அனைவரும் அறிந்ததே...

அடுத்து ஆவியைக் குறித்து நாம் பார்ப்போம். அறிவியல் பார்வையில் நோக்குவோமானால் ஆவி என்பது மனிதனுக்குள் இருக்கும் எனர்ஜி என்று சொல்லப்படும் ஒரு வகையான மின்னோட்டம் ஆகும்.

அடுத்து ஆத்துமா, ஒரு மனிதன் தன்னுடைய உடலை என் உடல் என்கிறான். இந்த கூற்றில் தன்னிலை உணர்வுக்கும் உடலுக்கும் அவன் வித்தியாசப்படுத்துவதை நீங்கள் எளிதில் அறியலாம். அப்படியானால் மனித உடலுக்குள் இருந்து மனிதனை இயக்கும் ஒரு ஆற்றல், அல்லது இந்த அழிந்து போகிற உடலுக்குள் குடியிருக்கிற ஒரு பிரபஞ்ச ஆற்றல் தான் ஆன்மா.இன்று இந்த ஆத்துமாவைப் பற்றி நாம் விளக்கமாக பார்க்க போகிறோம். மனிதனுடைய ஆத்துமா அவனுக்கு உயிரையும் உணர்வையும் கொடுப்பது மட்டுமின்றி இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் ஒரு பகுதியாக அந்த மனிதனை மாற்றிவிடுகிறது, அந்த ஆத்துமா அந்த உடலுக்குள் இல்லாமல் போனால் அந்த மனிதன் மரித்தவனாக அறியப்படுகிறான். இந்த ஆத்துமா உருவாக்கப்பட்ட பொழுதே ஒரு அடிப்படை இயல்போடு உருவாக்கப்பட்டுள்ளது.


அந்த ஒற்றை அடிப்படை இயல்புதான் இன்று மனித சமுதாயத்தில் நடக்கும் அனைத்து இன்ப துன்பங்களுக்கும் காரணம், இது என்ன புதுக் கதை புத்தர் ஆசையே துன்பத்துக்கு காரணம் என்றார் நீ ஆத்துமாவின் ஒற்றை இயல்புதான் மனித சமுதாயத்தின் இன்ப துன்பத்துக்கு காரணம் என்று சொல்லுகிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

புத்தர் ஆசையை துன்பத்துக்கு காரணம் என்று சொல்லியிருக்கமாட்டார். மாறாக பேராசையை சொல்லியிருக்கலாம் என்பது என் கருத்து, சரி விசயத்துக்கு வருவோம். அனைத்துக்கும் காரணமான அந்த மனித ஆத்துமாவின் ஒற்றை இயல்பு என்னவென்று முதலில் பார்த்துவிடுவோம்.

அந்த இயல்பு சார்ந்திருத்தல் ஆகும். சார்ந்திருத்தல் என்பது ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த விதியோ, அல்லது சமூக பிராணி என்று அழைக்கப்படும் மனிதனின் சமூக சார்ந்திருத்தலோ அல்ல. இது முற்றிலும் வேறுவகையான சார்ந்திருத்தல் ஆகும், நாம் முன்பே பார்த்த படி ஆத்துமா என்பது இந்த பிரபஞ்ச சக்திகளோடு தொடர்புடையது என அறிந்தோம். அதே போல படைப்பின் இரகசியங்கள் தொடரின் முன்பு பிசாசுகள் யார் என்பதையும் நாம் அறிந்தோம்.

பொதுவாக இந்த பிரபஞ்சத்தில் இரண்டு வகையான சக்திகள் உள்ளன. அவை பொதுவாக சொன்னால் நல்ல சக்தி, தீய சக்தி என்று ஒற்றை வரியில் அடக்கிவிடலாம். அத்தகைய சக்திகளில் ஒரு மனிதன் எந்த சக்தியை சார்ந்திருக்கிறானோ அதன் தன்மை அடிப்படையில் அந்த மனிதன் மாறிவிடுகிறான்.

இன்னும் சற்று வேறு கோணத்தில் சொல்லப்போனால் ஒருமனிதன் எந்த சக்தியை சார்ந்திருக்கிறானோ அந்த சக்திதான் அவனை ஆட்டுவிக்கிறது  அல்லது இயக்குகிறது. இந்த சக்திகளை ஒளி இருள் என்று பிரித்துக் கொள்வோம்.


ஒருமனிதன் ஒளியின் சக்தியை சார்ந்திருந்தால் அவன் ஒளி கொடுப்பவனாக மாறிவிடுகிறான். ஒருவேளை இருளோடு ஐக்கியப்பட்டவனாக இருந்தால் அந்த மனிதன் இருளுக்குரிய தன்மைகளை அடைகிறான்.

இவை இரண்டுக்கும் இடையே இடைப்பட்ட இடத்தில் மனிதன் இருக்கமுடியுமா என்ற கேள்வி இந்த நேரத்தில் எழுவது இயல்பானதே, அப்படிப்பட்ட நிலையில் இருக்கவே முடியாது ஒன்று ஒரு இடத்தில் வெளிச்சம் இருக்கவேண்டும் அல்லது இருள் இருக்கவேண்டும். இவை இரண்டுக்கும் இடையே இடைப்பட்ட நிலையும் இருள் என்றே கருதப்படும். ஒரு குவளை பாலில் ஒரு சொட்டு விசம் கலந்தாலும் அந்த பால் விசம் தானே அது போலதான். ஒரு மனித ஆத்துமா ஒன்று ஒளியாகிய கடவுளை சார்ந்து அதன் தன்மையோடு வாழ்ந்து நாம் போன பதிவில் பார்த்தபடி இருளை வெட்கப்படுத்த வேண்டும். அல்லது இருளாகிய சாத்தானின் தன்மையோடு சார்ந்து சுற்றத்தார்க்கும் இந்த உலகத்துக்கும் துன்பத்தை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.


இப்போது புரிகிறதா இந்த மனித ஆத்துமாவின் சார்ந்திருத்தல் இயல்பு, அடுத்து வரும் பதிவுகளை நீங்கள் இன்னும் கவனமாக வாசித்தால் ஒரு மனிதனை எப்படி இருளின் சக்தி ஆளுகைக்கு உட்படுத்துகிறது? அவைகள் பயன்படுத்தும் தந்திரங்கள் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி? போன்றவற்றை இன்னும் விளக்கமாக ஆதாரங்களோடு பார்க்கலாம் அதுவரை காத்திருங்கள்....

Post a Comment

2 Comments

  1. தங்களது பணிக்கு எனது வாழ்த்துகள் கர்த்தர் என் வாழ்கையிலும் பல அற்புதங்கள் செய்துள்ளார் http://ac-sarujan.blogspot.com/

    ReplyDelete
  2. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
    உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....

    ReplyDelete