Header Ads Widget

Responsive Advertisement

வெற்றிகரமான நான்காம் ஆண்டில்


அன்பானவர்களே,

இன்றோடு நம்முடைய பைபிள் அங்கிள் தளம் (may 18 2008)ஆரம்பிக்கப்பட்டு, மூன்றாண்டுகள் தேவனுடைய கிருபையால் நிறைவு பெறுகிறது, கடந்த ஆண்டிலும் நம்மோடு கூட இருந்து நம்மை நடத்தின தேவாதி தேவனுக்கு சகல துதியும் கணமும் மகிமையும் இன்றும் என்றும் சதாகாலங்களிலும் உண்டாவதாக ஆமென்.

கடந்த ஆண்டிலும் கூட தேவன் நம்முடைய தளத்தில் அனேக சிறப்பான மாற்றங்களை கொண்டுவர உதவி செய்தார், அறிக்கை படிவம், header ‍ல் ஓர் அருமையான Falsh Player ‍ மற்றும் 7 நிமிடங்களில் 100 துதிகள் ஆகியவைகளை அதிக கஷ்டங்களுக்கு மத்தியிலும் தொழில் நுட்பத்தை அறிந்து அதை வெளியிட தேவன் உதவினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளும் சேர்த்து வெறும் 6000 ip ‍ முகவரிகளிலிருந்து தான் நம்முடைய வலைப்பூ பார்க்கப்பட்டிருந்தது ஆனால் கடந்து போன ஆண்டில் சுமார் 22000 ip ‍ முகவரியிலிருந்து தேவன் மக்களை கொண்டுவந்து சேர்த்தார்.

ஆனால் தளத்தின் நோக்கமான புறஜாதிகளின் பங்களிப்பு கொஞ்சம் கடந்த ஆண்டு குறைவாகவே இருந்தது காரணம் அதிகமான கிறிஸ்தவ பாடல்களைப் பதித்ததுதான். இனி வரும் ஆண்டில் கர்த்தருக்கு சித்தமானால் புறஜாதிகளைக் கவரும் வகையில் நல்ல அறிவியல் அடிப்படையிலான ஆய்வுக்கட்டுரைகள், கதைகள், கவிதைகள், தொடர்கதைகள், நாவல்கள், ஆகியவை வரும் நாட்களில் உங்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.


மேலும் கடந்த ஆண்டிலும் கூட வந்த ஜெபக்குறிப்புகளுக்காக ஜெபித்த அன்பு ஜெபக் குழு உறுப்பினர்களுக்கு நன்றி, ஆனாலும் கடந்த ஆண்டில் சுகவீணப்பட்டு நமக்கு ஜெபவிண்ணப்பம் அனுப்பியிருந்த சென்னையைச் சேர்ந்த அன்பு சகோதரி சாந்தி அவர்கள் நித்திரைடைந்தார்கள் என்பது மிகவும் துக்ககரமான செய்தியாக இருந்தது.

வரும் நாட்களில் ஜெபவிண்ணப்ப பகுதி இன்னும் எளிமையாக்கப்பட்டு, மின்னஞ்சல் அனுப்ப தெரியாதவர்களுக்கும் உதவும் வகையில் கர்த்தருக்கு சித்தமானால் மாற்றியமைக்கப்படும். மேலும் இன்னும் அனேக ஜெபக்குழு உறுப்பினர்களும் இனைக்கப்பட்டு அனேகருக்காக பாரத்தோடு ஜெபிக்கும் ஊழியத்தில் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.


புறஜாதியார் மத்தியில் அதிக வரவேற்பையும் வெறுப்பையும் சம்பாதித்த படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத் தொடர் அனேக பாதிப்புகளை உண்டாக்கியது என்பதை கண்கூடாக அறியமுடிந்தது. அந்த கட்டுரைத் தொடர் கர்த்தருக்கு சித்தமானால் இந்த மாதத்திலேயே மீண்டும் துவங்கும் என்பதையும் மகிழ்ச்சியோடு அறிவித்துக் கொள்கிறோம்.

இது மட்டுமல்ல அனேக புறஜாதிகளின் வலைப்பூக்களில் நம்முடைய தள்த்துக்கு கடந்த ஆண்டிலும் அதிகமான இனைப்புகள் கிடைக்க தேவன் உதவி செய்தார், இதன்மூலமாக அதிகமான பார்வையாளர்களையும் தேவன் கொண்டுவந்து சேர்த்தார், எங்களுக்கு கணினி அறிவு மூன்றாண்டுகளுக்கு முன்னால் மின்னஞ்சல் அனுப்பும் அளவு கூட இல்லை. ஆனால் தேவன் இந்த வலை பூவை இம்மட்டும் சிறந்த முறையில் நடத்த கிருபை செய்து வருகிறார்,

கர்த்தரின் ஞானத்தினாலும், அளவற்ற அன்பினாலும், முடிவற்ற இரக்கத்தினாலுமே இது சாத்தியமாயிற்று என்பதை இந்த நல்ல நாளிலும் கூட நன்றியோடு நினைவு கூறுகிறோம்.


இந்த இனைய தள ஊழியங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள், அனேக அலுவல்களுக்கு மத்தியில் இதை நடத்திக்கொண்டு வருகிறோம். இன்னும் அனேகருக்கு இந்த தளத்தை பற்றி அறிமுகம் செய்து வையுங்கள்.


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே கடந்த ஆண்டுகளில் நம்மோடு கூட இருந்து நம்மை நடத்தியது போல இந்த புதிய ஆண்டிலும் நம்மோடு கூட இருந்து நம்மை காத்து நடத்துவாராக....

ஆமென்

Post a Comment

2 Comments

  1. 3 ஆண்டுகளை கடந்து நான்காவது ஆண்டுக்குள் பிரவேசித்துள்ளீர்கள். உண்மையிலேயே இது பெரிய சாதனைதான். வாழ்த்துக்கள் நண்பரே. தளவடிவமைப்பும் முன்பை விட மிக சிறப்பாக அமைந்துள்ளது. விடுபட்ட தொடரை தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் இணையத் தள ஜெப ஊழியம் இன்னும் சிறப்பாக அமையும். இக்காரியங்களுக்காக ஜெபித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. தங்களுடைய வாழ்த்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் நன்றி நண்பரே, தங்கள் ஜெபத்திற்காகவும் நன்றி. தங்களுடைய இனைய ஊழியமும் மகத்தானது ஆண்டவர் உங்களோடு இருப்பாராக ஆமென்.

    ReplyDelete