Header Ads Widget

Responsive Advertisement

சாத்தனின் சாதூர்யம் (சிறுகதை)

காணகத்துக்கும் அந்த அதிமதுர தடாகத்துக்கும் அருகில் பவணந்தரின் ஆசிரமம் இருந்தது இயற்கை எழில் கொஞ்சும் அழகான மலர்கள் பூத்துக் குலுங்கும் அற்புதமான நந்தவனம் அது. அங்கே அரசிளங் குமாரர்கள் முதல் செல்வந்தர்களின் குமாரர்கள் வரை பல சிறார்கள் குருகுலக் கல்வி பயின்று வந்தார்கள், பவணந்தர் சொற்போர், மற்போர், வில்வித்தை,சாணக்கிய தர்மம், கடவுள் சாஸ்திரம் என்ற அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்.

அன்று கடவுள் சாஸ்திரம் பற்றி அரசமர நிழலில் அமர்ந்து போதித்துக் கொண்டிருந்தார், குழந்தைகளே கடவுள் என்பவர் யார்? என்றார்

அம்மையும் அப்பனுமே கடவுள் என்றார் வில் வித்தை சூரணான வளவன், நன்றாகச் சொன்னாய் ஆனாலும் என்று முனிவர் முடிப்பதற்குள் அரசிளங்குமரன் வழுதி அதோ அந்த மூலையில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகனே கடவுள் என்றான், நம்மை எல்லாம் உண்டாக்கினவர் தான் கடவுள் என்று அழுத்தமாக சொன்னான் சாத்தன், மிகச் சரியாகச் சொன்னாய் சாத்தா இங்கே வா என்று அழைத்து அவனைப் பாராட்டினார்.

குழந்தைகளே நம்மை நம் மூதாதையர்களை, இந்த மரத்தை அந்த மலையை வானத்தை மேகத்தை எல்லாம் உண்டாக்கியவர்தான் கடவுள், இந்த பூக்களையும் அவர்தான் உண்டாக்கினாரா என்று குறும்புக்கார கவுந்தி கேட்க ஆம் நாம் பார்ப்பவைகள் ஒவ்வொன்றையும் உருவாக்கியவர் கடவுள் தான் என்றார் முனிவர்,

அப்படியானால் நாம் எதற்காக சிலைகளை வணங்குகிறோம் என்று எதிர்க் கேள்வி கேட்டான் சாத்தன், இறைவன் காணக்கூடாதவர் அல்லவா? ஆகவே சிலை செய்து காணும்படியாக வணங்குகிறோம் என்று பதில் சொன்னார் முனிவர், மாணாக்கர்கள் புரிந்தது போல தலையாட்டினார்கள்.

சாத்தன் "கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை இந்த கற்சிலைகளுக்குக் கொடுத்தால் அந்தக் கடவுள் கோபித்துக் கொள்ளமாட்டாரா?" வெவ்வேறு பெயர்களில் அவரை அழைக்கலாமா? என்று தைரியமாகக் கேட்டான்,

குழந்தாய் அருகில் வா என்று அழைத்தார் அவனது காதில் கிசுகிசுத்தார், சாத்தன் ஓடிச் சென்று மல்லிகை மலர் ஒன்றைக் கொண்டு வந்தான், பவணந்தியார் இது என்ன என்றார் மலர், பூ, மல்லி, அந்திமல்லி, என்று பல குரல்கள் கேட்டன...


"அமைதி..... அமைதி...." இது எல்லாமே இந்த மலரைக் குறிக்கும் பெயர்கள் அல்லவா ஆனாலும் அது ஒன்றுதானே அது போல வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் கடவுள் ஒருவர்தான், சரி சிலைக்கு வருவோம் இந்த மலர் எங்கிருந்து வந்தது? என்ரு புதிய கேள்வி கேட்டார், 

"செடியில்" "கொடியில்" என்று மாறிமாறி பதில்கள் வந்தது அது எங்கே உங்களால் பார்க்க முடிகிறதா? என்று துனைக் கேள்வி கேட்டார்.

அது வெளியே இருக்கும், ம்ஹும் தெரியல, காணோம் என்று மாணாக்கர்கள் முனுமுனுக்க இப்படித்தான் நம்மை உண்ண்டாக்கியவரும் நாம் பார்க்கக் கூடாத இடத்தில் இருக்கிறார், நாம் இந்த மலரைப் பார்க்கும் போது அந்த மலரை உண்டாக்கிய செடியை நினைக்கிறோம் அல்லவா?

"ஆமாம்" "ஆமாம்" என்று குரல்கள் பலமாக ஒலிக்க சாத்தன் மட்டும் இந்த மலருக்கு தண்ணீர் கொடுத்தால் அந்த செடிக்குப் பயன்படுமா என்று மறுபடியும் குறுக்கிட்டான்.

சாத்தா அதிகபிரசங்கமாகப் பேசாதே இது நம் முன்னோர்கள் உருவாக்கிய நம்பிக்கை இதைப் பழிக்கக் கூடாது என்று கடிந்து  கொண்டார்,

சாத்தனுக்கு அவமானமாகப் போனாலும் தன் குருவுக்கு சரியான பாடம் கற்பிக்க சமயம் பார்த்துக் காத்திருந்தான்,


சில நாள் கழித்து சாணக்கிய தர்மம் போதித்துக் கொண்டிருந்தார், குருவணக்கம், அரசனைப் பணிதல், என்று விளக்கம் தந்து கொண்டிருந்தார் பவணந்தி. மன்னருக்கும் குருவுக்கும் பெற்றோருக்கும் முதல் மரியாதை தரவேண்டும். அவர்கள் பணிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள் என்று போதித்தார்


அடுத்த நாள் காலை நேரத்தில் பவண‌ந்தியார் தியானத்தில் இருக்கும் போது மாணவர்கள் தயக்கத்துடன் குருவே குருவே என்று காதில் கூப்பிட்டார்கள் சிறிது நேரத்தில் கன்விழித்த அவர் என்னவென்று கேட்டார்.

குருவே சாத்தனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது, உங்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை ஒரு கம்புக்குக் கொடுத்த்துக் கொண்டிருக்கிறான் என்றான் வளவன், குறும்புக்கார கவுந்தி மாத்திரமல்ல அந்தக் கம்புக்கு உங்கள் காலை உணவைக் ஊட்டிவிட்டுக் கொண்டிருக்கிறான் நீங்கள் பட்டினிதான் போங்கள் என்று சீண்டினான்


பவண‌ந்தியார் கோபம் கொப்பளிக்க சாத்தா சாத்தா என்று கத்திக்கொண்டே அவன் இருக்கும் இடத்துக்குச் சென்று அவனைப் பிடித்துத் தள்ளி விட்டு அந்தக் கொம்பை பிடுங்கி தூர எறிந்து போட்டு விட்டு "குரு துரோகம் செய்ய என்ன் துனிச்சல்? குருக்குக் கொடுக்கும் வணக்கத்தை ஒரு மரக்கொம்புக்குக் கொடுத்து என்னை அவமாணப்படுத்துகிறாயா என்று அடிக்க ஆரம்பித்தார் வலி பொறுக்க முடியாத சாத்தன் அலறினான்,

பின்பு முதுகையும் காலையும் நீவிக்கொண்டே குருவே நான் என்ன தவறு செய்தேன்? உலகத்தை உண்டாக்கியவருக்குக் கொடுக்கும் வணக்கத்தை ஒரு கற்சிலைக்கு கொடுக்க முடிந்தால் ஒரு மனிதரான உங்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை அந்தக் கம்புக்குக் கொடுப்பதும் நீதிதானே என்றான்.

கடவுள் சாஸ்திரத்தை நான் தவறாகக் கற்பித்து விட்டேன் உன் புத்திக் கூர்மையால் என்னை திருத்தி விட்டாய் சாத்தா என்று கட்டியனைத்து முத்தமிட்டார்,

ஆம் பிரியமானவர்களே தங்களுக்குக் கிடைக்க வேண்டிய மரியாதையை ஜடப் பொருளுக்கோ மிருகங்களுக்கோ கிடைப்பதை மனிதர்கள் கூட வெறுக்கிறார்கள், ஆனால் அதே மனிதர்களையும் இந்த அன்ட சராசரங்கள் காணப்படுகிறவைகள் காணப்படாதவைகள் யாவற்றையும் படைத்த சர்வவல்லமையுள்ள கடவுளுக்குக் கொடுக்கும் மரியாதையை கல்லுக்கும், மண்ணுக்கும், உலோகச் சிலைகளுக்கும் இன்னும் கூட விலங்குக்கும் மனிதர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடவுள் நிச்சயம் இதை விரும்ப மாட்டார், நம் முன்னோர்கள்  மதியீனத்தின் நிமித்தம் நமக்குக் கற்பித்த இந்த முறைகளை இந்த கனமே தூக்கி எறிவோம். கடவுள் நமக்கு கொடுத்த பைபிள் சொல்கிறது இத்தகைய வழிபாடுகள் கடவுளைக் கோபமடையச் செய்யும் என்று, அது மட்டுமல்ல உண்மையான தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்காமல் விக்கிரகங்களை ஆராதிப்பவர்கள் இந்த உலகத்தின் முடிவில் அக்கினிக்கடலில் தள்ளப்படுவார்கள் என்றும் சொல்லுகிறது ஆகவே அந்த ஆக்கினைக்குத் தப்ப இன்றே அவைகளை விட்டொழிப்போமாக‌

Post a Comment

0 Comments