Header Ads Widget

Responsive Advertisement

பாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம்-5

பாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம்-5

பாவம் என்ற சொல்  பாபம் என்ற சமஸ்கிரதத்திலிருந்து வந்ததாகும், தமிழில் பாவம் என்ற சொல்லுக்கு சரியான வார்த்தை 'மலம்' ஆகும், இந்த சொல் உயிரினங்களிலிருந்து வெளிவரும் திடக்கழிவைக்குறிக்கும் சொல் ஆகும். அ'மலன்' நிர்'மலன்' போன்ற சொற்கள் நம்முடைய பரிசுத்த தேவனைக் குறிக்கும் தமிழ் சொற்களாகும்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

உலகில் வேறெந்த பழங்கால நூலுக்கும் இல்லாத சிறப்பு பைபிளின் புதிய ஏற்பாட்டிற்கு உண்டு. இதுவரைக்கும் வேறு எந்த பழங்கால நூலுக்கும் கிடைக்காத அளவுக்கு பைபிளின் மூலப்பிரதிகள் கிடைத்திருக்கின்றன. இவை அனைத்துமே இலன்டன் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் "மூலப்பிரதி விமர்சன அறிவியல்" முறையில் தொல்பொருள் அறிஞர்கள் பைபிளில் இடைச்செருகல்கள் திருத்தல்கள் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் (மேலும் விவரங்களுக்கு இந்த தொடுப்பை சொடுக்கவும்:http://bit.ly/zxdkVY )

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

தமிழ் மொழி கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் உயிர் எழுத்துக்களுக்கு புள்ளிவைத்தல், சொற்களுக்கு இடையில் இடைவெளிவிடுதல் கெ கே கொ கோ போன்ற சொ ஒற்றை சுழிக்கொம்பு, குறிளுக்கும் நெடிலுக்கும் வித்தியாசப்படுத்த கால் வாங்குதல் போன்ற திருத்தங்கள் பைபிளை மொழி பெயர்த்த கிறிஸ்தவ மிஷனரிகளான ஜி யு போப், வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்ட வில்லியம் பெஸ்கி ஆகிய கிறிஸ்தவ மிஷனரிகளால் செய்யப்பட்டது. இன்றைய தமிழ் எழுத்துக்களின் சீரான வடிவத்துக்கும் காரணம் இவர்களே..

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

மாற்கு நூல்தான் முதன்முதலாக எழுதப்பட்ட நற்செய்தி நூல் என்பது நம் எல்லோருக்கும் தெரியும், இது பேதுரு சொல்ல மாற்குவால் எழுதப்பட்டது, இந்த நூலின் 16 ஆம் அதிகாரம் 8 வசனம் வரைக்கும் எழுதியவர் மாற்கு என்கிற யோவான் ஆவார். இதற்கு அடுத்து வரும் வசனங்கள் எழுதப்படுவதற்கு முன்னால் பேதுரு கொள்ளப்பட்டார். அதற்குபின் உள்ள மாற்கு சுவிஷேச நூலின் வசனங்கள் ஆதித்திருச்சபை முற்பிதாக்களால் எழுதப்பட்டது. (மேலும் விவரங்களுக்கு இந்த தொடுப்பை சொடுக்கவும்:http://bit.ly/KB4iYE )


\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////


கிறிஸ்மஸ் மட்டும் எல்லாவருடங்களிலும் ஒரே தேதியான டிசம்பர் 25 வருகிறது ஆனால் புனிதவெள்ளி என்று சொல்லப்படுகின்ற இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் தவக்காலங்கள் எனப்படும் லெந்து நாட்கள் மாறிமாறி வருகிறதே ஏன் தெரியுமா? இந்த நாட்கள் யூதர்களின் பஸ்கா பண்டிகையை மையப்படுத்தி வருகிறது. யூதர்களின் மாதங்களையும் அதைக் கணக்கிடும் முறையையும் அறிந்து கொள்ள இந்த தொடுப்பைத் தொடரவும். அனைவருக்கும் பைபிள் அங்கிள் தளத்தின் சார்பில் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்...

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

Post a Comment

0 Comments