Header Ads Widget

Responsive Advertisement

இஸ்லாமியரின் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளுக்கான விடைகள் (பாகம்1)

ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒரு இஸ்லாமியர் மின்னஞ்சல் வழியாக என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மகிழ்ச்சியடைகிறேன்.

கேள்வி எண் 1. இயேசு ஒரு கிறிஸ்தவரா? கிருஸ்தவர் என்று பைபிள் இல் உள்ளதா?
நல்ல கேள்வி ஹாரீஸ் அவர்களே, இயேசு கிறிஸ்தவரா என்று அறிவதற்கு முன்னால் கிறிஸ்து என்றால் என்ன எனபதைப் பார்த்து அதை இயேசுவோடு பொறுத்திப் பார்த்தால் அவர் கிறிஸ்தவரா என்பதையும் பைபிளில் அப்படி சொல்லப்பட்டுள்ளதா என்பதையும் எளிதாக அறியமுடியும்.

கிறிஸ்து என்ற சொல் ஒரு கிரேக்கச் சொல்லாகும், இதன் எபிரேய சொல் மேசியா(S/O GOD) என்பதாகும், மல்லிகைப் பூவை தமிழில் மல்லிகை என்றும் ஆங்கிலத்தில் ஜாஸ்மின் என்றும் அழைக்கிறோம் அல்லவா அப்படியே கிறிஸ்துவும், மேசியாவும் ஒரே பொருளையுடைய வெவ்வேறு மொழி சொற்கள்(யோவான் 1:41, 4:25). இதற்கு தமிழில் கடவுளால் அபிஷேகிக்கப்பட்ட இறைமகன் மற்றும் இஸ்ரவேலை அனாதியாய் ஆள்பவர் என்று பொருள், யூதர்களுடைய வரலாற்றை எடுத்துக்கொண்டால் ஆதாம் காலத்தில் பாம்புக்கு கொடுக்கப்பட்ட சாபத்தில் நேரடியாக பிதாவாகிய தேவனாலும், மனிதர்கள் மூலமாக‌ ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான‌ ஏனோக்கின் காலம் தொடக்கியே மேசியாவின் வருகையைக் குறித்த வெளிப்பாடுகள் வர ஆரம்பித்திருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் மோசே, சாமுவேல், தாவீது, சாலமோன், ஏசாயா, என்று பைபிளில் பெயர் குறிப்பிடும்படியான அனைத்து தீர்க்கதரிசிகளும் மேசியாவைக் குறித்த முன்னறிவிப்பு செய்திருக்கின்றார்கள். இந்த முன்னறிவிப்புகள் எல்லாம் சுமார் 500க்கும் அதிகமானவையாகும், அவைகள் அனைத்தையும் இயேசு நிறைவேற்றினார், அதாவது யாரிடம் எங்கு என்பது தொடங்கி இன்னவிதமாக மரிக்கப் போவது, உயிர்த்தெழுவது என்பது வரைக்கும் நிறைவேற்றினார். எந்த மனிதனாலும் தீர்மானிக்க முடியாத இரண்டு விசயங்கள் யாரிடம் எங்கு எப்போது பிறப்பது எப்படிப்பட்ட மரணத்தின் மூலம் மரிப்போம், மரித்த பின்பு திரும்ப எழும்புவது ஆகியவைகள் தீர்க்கதரிசிகள் மூலமாக முன்னறிவிக்கப்பட்டதை அப்படியே நிறைவேற்றினார் எப்படி?

யாரிடம் மேசியா பிறப்பார் என்பதைக் குறித்த தீர்க்கதரிசனம் 

யூதர்களின் தோரா அதாவது கிறிஸ்தவர்களின் பழைய உடன்படிக்கையிலுள்ள ஏசாயா தீர்க்கதரிசன ஆகமத்தில் "இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்."(ஏசா7:14)

அதன்படியே இயேசுவும் கன்னிகையின் வயிற்றில் பிறந்தார் என்று இஸ்லாத்தும் ஒப்புக்கொள்கிறதல்லவா?

மேசியா எங்கே பிறப்பார் என்பதற்கான தீர்க்கதரிசனம்
அதே பழைய ஏற்பாட்டிலுள்ள மீகா தீர்க்கதரிசி: எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.(மீகா 5:2)

என்று மேசியா பெத்தலகேமில் பிறப்பார் என்று சொல்லப்பட்ட தீர்க்கதரிசனமும் இயேசுவில் நிறைவேறியிருக்கிறது என்பதையும் இந்த உலகம் அறியும்.,

மேசியாவின் மரணம் குறித்த தீர்க்கதரினம்
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.(ஏசாயா 53:7)

கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.
பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.(சங்கீதம்2)

இது அப்படியே இயேசுவின் வாழ்க்கையில் நிறைவேறிற்று

இயேசுவே மேசியா என்று அவர் வாயில் சொல்லுதல்
இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.(மத்தேயு 27:11)
அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின் மேல் கட்டினார்கள்.(மாற்கு 15:26)
மேற்கண்ட வசனங்கள் இயேசு மேசியா என்று அறிவிக்கப்பட்டதை அறிந்து கொள்கிறோம்,

அந்த வகையில் இயேசுவே கிறிஸ்து என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் பைபிள் சொல்லுகிறது,

இயேசு கிறிஸ்து சரி இயேசு கிறிஸ்தவரா?

அன்பு நண்பரே இயேசுகிறிஸ்து அதாவது இறைமகன், இஸ்ரவேலை அநாதியாய் ஆள்பவர், பிதாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவர் இயேசு கிறிஸ்து என்று பைபிள் தெளிவாக விளக்கியதைப் பார்த்தோம் இப்போது கிறிஸ்வர்கள் என்பதைக் குறித்துப் பார்ப்போம்,

கிறிஸ்தவர்கள் என்பவர்கள் யார்?
யூதர்கள் பொதுவாக மற்ற இன‌த்தாரோடு பந்தியிருக்க மாட்டார்கள், ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்ட யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்ட கிரேக்கர்களுடன் ஒரே சபையாக அந்தியோகியா என்ற இடத்தில் உலக வரலாற்றில் முதன்முறையாக சமபந்தி போஜனம் அதாவது கிறிஸ்து கற்பித்த இராபோஜனத்தை நிணைவுகூரும் வகையில் பந்தியிருந்தார்கள். அதைப் பார்த்த இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதர்களும், கிரேக்கர்களும், மற்ற இணத்தாருடன் பந்தியிருக்கும் தங்கள் மக்களை கேலி செய்வதற்காக கிறிஸ்தவர்கள் என்ற பட்டப்பெயரை வைத்து அழைத்தர்கள் அது முதல் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் வழங்களாயிற்று என்று வேதம் சொல்லுகிறது(அப்போஸ்தலர் 11:26)

அது சரி இயேசு கிறிஸ்தவரா?
ஆம் அவர் ஒரு கிறிஸ்தவரே, கிறிஸ்துவுக்கு கிறிஸ்தவராவதில் பெரிய சிரமம் இருக்கப் போவதில்லை, அவர் அவருடைய சீஷர்களுக்கு முன்னுதாரணமாக தான் வாழ்ந்த காலத்தில் சகேயூ எனப்பட்ட ஒரு ஆயக்காரன்(தாழ்ந்த குடி) வீட்டில் உணவருந்தினார், மத்தேயூ எனப்பட்ட ஒரு ஆயக்காரனை தன்னுடைய 12 அப்போஸ்தலர்களுல் ஒருவராக வைத்து தானும், பின்நாட்களில் யூதர்கள் மற்றும் கிரேக்கர்களால் கிறிஸ்தவர்கள் என்று இகழப்பட்டவர்களின் தலைவர்களாக இருந்த அப்போஸ்தலர்களும், அந்த ஆயக்காரனுடன் பந்தியிருந்தார்கள்,

அன்று ஜாதி இன மொழி வித்தியாசமில்லாமல் அந்தியோகியாவில் பந்தியிருந்த இயேசுவின் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டால் இன்று பரிசுத்த திருப்பந்தியில் கிறிஸ்துவின் இரத்தமும் சரீரமுமாகிய சாக்கிரமந்தை புஷித்துப் பானம்பன்னும் எங்களையும் இந்த உலகம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லுமானால் எங்கள் தலைவர் இயேசுவும் கிறிஸ்தவர் தானே?

உங்களுடைய இரண்டாவது கேள்வி
தற்போது உங்களிடம் உள்ள பைபிளின் வரலாறு என்ன?
இதற்கான பதில் இந்தத் தொடுப்பில் இருக்கிறது: http://www.bibleuncle.com/search/பைபிள் வரலாறு
இதைப் படியுங்கள் நாளை அதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கர்த்தருக்கு சித்தமானால் நிச்சயமாக தெளிவாக்குகிறேன் நன்றி

Post a Comment

0 Comments