Header Ads Widget

Responsive Advertisement

ஹாரிஸ் என்ற இஸ்லாமியருக்கான பதில்கள் பாகம்-2

தற்போது உங்களிடம் உள்ள பைபிளின் வரலாறு என்ன?
பைபிளின் மூலப்பிரதி எங்கே உள்ளது?


பைபிள் வரலாற்றை ஏற்கெனவே இங்கே சுருக்கமாக தெளிவாக எழுதியிருந்தாலும், இஸ்லாம் வியாபாரிகளின் பொய்பிரச்சாரங்களுக்குத் தங்களை விற்றுப்போட்ட இஸ்லாம் நண்பர்களுக்கு இதைக் குறித்த தெளிவை உண்டாக்க வேண்டிய காலச்சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

உலகத்தில் வேதங்கள் என்று சொல்லப்படுகின்றவைகள் பெரும்பான்மையானவைகள் பூரணமானவைகள் அல்ல, அவைகள் மற்ற நூல்களின் உசாத்துனையின்றி அறிதல் இயலாது, அதே போல பூரணவாழ்வுக்கான வழிகாட்டியாகவும் அவை இருப்பதில்லை, ஆனால் பைபிள் முற்றிலும் மாறுபட்டது மற்ற நூல்களின் துணை தேவையில்லை, அதே போல பூரண வாழ்வுக்கான வழியை சொல்வதில் துவக்கம் முதல்கொண்டே நோக்கத்தில் உறுதியாக நிற்கின்றது, அந்த பூரண வாழ்வுக்கான வழி இயேசு கிறிஸ்துவே.. உலகத்தோற்றம் முதற்கொண்டு உலகத்தின் முடிவு வரைக்கும் தேவக்குமாரனாம் இயேசு கிறிஸ்துவை மையப்படுத்தி தேவ ஆவியானவரின் ஏவுதலால் பைபிள் எழுதப்பட்டது

யாரால் எழுதப்பட்டது?
பைபிள் மனிதர்களால் எழுதப்பட்டது தான் ஆனால் அதில் தொடக்கம் முதல் முடிவு வரை எழுதப்பட்ட‌ காலமும், எழுதப்பட்ட மனிதர்களின் மொழி பன்பாடு நாகரீகம் கல்வியறிவு ஆகியவைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைகள். இவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் சொல்லப்பட்ட தகவல்கள் ஒரே மாதிரியானவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பினைந்தவை, என்ன ஒன்றும் புரியவில்லையா? தொடர்ந்து படியுங்கள புரிந்து விடும்

அதாவது பைபிளில் முதல் புத்தகம் முதல் கடைசிப் புத்தகம் வரை எழுத சுமார் 1600 (ஆயிரத்து ஆறுனூறு) ஆண்டுகள் ஆனது, மேலும் எழுதிய மனிதர்களும் முற்றிலும் மாறுபட்டவர்கள் அதாவது மோசே போன்ற தீர்க்கதரிசிகள் எஸ்ரா போன்ற ஆசாரியன். தாவீது போன்ற அரசர்கள், தானியேல் போன்ற அமைச்சர்கள், பவுல் போன்ற அறிஞர்கள், பேதுரு போன்ற மீனவர்கள், லூக்கா போன்ற மருத்துவன், என பலதரப்பட்ட 40 மனிதர்களால் எழுத்தப்பட்டது தான் பைபிள், மேலும் இவர்கள் வாழந்த காலமும் இடமும் ஒன்றோடு ஒன்று முற்றிலும் மாறுபட்டவை.

எழுதப்பட்ட மொழிகள்
அதோடு அல்லாமல் எழுதப்பட்ட மூல மொழிகளிலும் வேறுபாடுகள் உண்டு பழைய ஏற்பாட்டின் பெரும்பாலான பகுதிகள் எபிரேய மொழியிலும், சில பகுதிகள் அரமாயிக் மொழியிலும் எழுத்தப்பட்டது, புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டது இப்படி பன் மொழியில் எழுதப்பட்டதுதான் பைபிள், ஒரு வேளை இவைகள் வேறு வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் எழுதப்பட்ட இடங்கள் ஒன்றாக இருக்குமோ என நீங்கள் நினைப்பது தெரிகிறது அதுதான் இல்லை

எழுதப்பட்ட இடங்கள்
மோசே பாலஸ்தீனாவிற்கு வெளியே எழுதினார். கானான் தேசத்தில் பலர் எழுதினார்கள், பாபிலோனிலிருந்தும், தாவீது பாலைவனத்திலிருந்தும் அரச சிம்மாசனத்திலுமிருந்தும், புதிய ஏற்பாட்டுக் கடிதங்களை ஆசிய ஐரோப்பிய கண்ட முக்கிய நகரங்களில் இருந்தும் எழுத்தப்பட்டது

பைபிளின் ஆசிரியர் யார்,

பைபிளை சுமார் 40 மனிதர்கள் எழுதினார்கள் என்று சொல்லிவிட்டு இப்போது அதன் ஆசிரியர் யார் என்ற கேள்வி குழப்பத்தை உண்டாக்கலாம், ஆனால் வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு மனிதர்கள் மூலம் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு நாகரீகத்தில், வெவ்வேறு இடங்களிலிருந்து, வெவ்வேறு காலச்சூழ்நிலைகளில் எழுதப்பட்ட ஒரு நூல் எப்படி முரண்பாடுகள் அற்றதாக இருக்க முடியும் என்ற கேள்வி பிறப்பது இயல்பே ஆனால் இதை எழுதியவர்கள் எல்லோரும் நாம் முன்பே குறிப்பிட்டது போல‌ தேவ ஆவியானவரின் ஏவுதலால் தான் எழுதினார்கள், அதனால் தான் பூரண வாழ்வுக்கான வழியை(அந்த வழி இயேசு கிறிஸ்து) மையப்படுத்தியே எழுதப்பட்டிருக்கின்றது, அதனால் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து சொல்லப்படுகின்ற நோக்கத்தில் உறுதியாக இருக்கின்றது,

பைபிளில் துவக்கம்,

மோசே வனாந்திரத்தில் எகிப்த்திலிருந்து கானான் தேசத்துக்கு இஸ்ரவேல் மக்களை நடத்திச் சென்றபோது தேவ ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டது பைபிளில் இருக்கும் முதல் 5 நூல்கள் ஆகும், உலகத்தைக் காத்து இரட்சிக்கும் மேசியா என்ற கிறிஸ்து இஸ்ரவேல் சந்ததியில் பிறப்பார் என்ற வாக்குறுதியைப் பெற்ற ஆபிரகாமின்(ஆதியாகமம் 22:18, கலாத்தியர் 3:16) வழி வந்த இசாக்கு யாக்கோபின் வம்சாவழியினராகிய இஸ்ரவேல் மக்களுக்கு மேசியாவின் வருகையை மீண்டும் ஒருவிசை உறுதிப்படுத்தி, அவர்களை பரிசுத்த ஜனமாக வேறுபிரித்து உலகத்தின் பாவங்களுக்கு பலியாக தன்னைத்தான் ஒப்புக்கொடுக்கப் போகின்ற கிறிஸ்துவின் நிழலாக பலிகளையும்,

உன்னிடத்தில் நீ அன்பு கூறுகிறது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக என்ற கிறிஸ்து கற்பித்த அடிப்படை சத்தியத்தின் நிழலாட்டமாக நியாயப்பிரமானத்தையும்(10கட்டளைகள்)தேவன் கொடுத்த வரலற்றையும், அப்படி வேறுபிரிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களின் வரலாற்றையும் சொல்லும் நூல் பஞ்சாகமம் என்று சொல்லப்படுகின்ற மோசேயின் ஆகமங்களாகும்,

அதைத் தொடர்ந்து வந்த யோசுவா, இஸ்ரவேல் மக்கள் கானானில் குடியமர்ந்த பின்பு நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் வரலாறு, சாமுவெல் தீர்க்கதரிசியின் ஆகமம், அதைத் தொடர்ந்து இஸ்ரேல் மக்களை ஆண்ட இராஜாக்களைக் குறித்த விவரங்கள் அவர்களது நடபடிகளை விவரிக்கும் நாளகமம், மற்றும் அவ்வப்போது இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய வார்த்தையை விட்டு வழி விலகும் போதெல்லாம் தேவன் தீர்க்க தரிசிகளை அனுப்பி எச்சரித்தார், அவர்கள் கண்ட தரிசனங்கள் மற்றும் அவர்கள் எழுதிவைத்த வரலாற்று குறிப்புகள் ஆகியவை அடங்கிய நூல்கள் தீர்க்கதரிசன ஆகமங்கள் எனப்படும், இவைகளைத் தொகுத்தவர் எஸ்ரா என்ற ஆசாரியன் ஆவான்.

இழையோடும் நோக்கம்

இந்த நூல்களிலும், இஸ்ரவேலின் கோத்திரத் தலைவனாகிய அபிரகாமுக்கு தேவன் ஆனையிட்டுக்கொடுத்த மேசியாவைக் குறித்த வெளிப்படுகள், எதிர்பார்ப்புகள், அவருடைய ஆளுகை எப்படி இருக்கும் என்பதைக் குறித்த தெளிவான விளக்கங்கள் என்று ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கில் தொடங்கி, மோசேயின் ஆகமங்களில் இஸ்ரவேல் சந்ததியாருக்கு உறுதி செய்து அதன் நீட்சியாக தீர்க்கதரிசன ஆகமங்களில் மேசியா முன்மொழியப்படுகின்றார்.

மேசியாவின் வருகை யூதா(யூதர்) கோத்திரத்தில் உறுதி செய்யப்படுதல்
இஸ்ரவேல் கோத்திரம் 12 ஆகும், இராஜாக்களின் காலம் வரைக்கும் மேசியா எந்த கோத்திரத்தில் பிறப்பார் என்று தெரியாமல் இருந்தது அது தாவீது இராஜாவின் காலத்தில் யூதர்களிடமிருந்து அதிலும் குறிப்பாக தாவீதின் சந்ததியில் பிறப்பார் என்று உறுதிப்படுத்தப்பட்டது(சங்கீதம் 2:7)

அதைத் தொடர்ந்து வந்த தீர்க்கதரிசிகள் பெத்தலகேமிலும், கன்னியின் வயிற்றிலும் பிறப்பார் என்று மேசியாவின் வருகையைக் கூர்மையாக்கினார்கள், இதைக் குறித்து சென்ற பதிவில் நாம் விரிவாகக் கண்டோம்...

இதுவரை மேசியாவின் வருகை ஆபிரகாம் >> ஈசாக்கு >> இஸ்ரவேல் >> யூதர் >> தாவீது வம்சம் >> பெத்தலகேம் >>  கன்னிகை என்று வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த வெவ்வேறு மனிதர்கள் மூலம் தேவ ஆவியானவர் முன்னறிவித்ததை பார்த்தோம் இது பைபிளில் பழைய ஏற்பாடு என்று சொல்லப்படுகின்றது.

புதிய ஏற்பாடு
அடுத்து மேசியாவின் பிறப்பு இறப்பு, உயிர்த்தெழுதல் பரமேருதல், அதன் பிறகு முன்பு யூதர்களுக்கு மாத்திரம் இருந்த மேசியாவை தேவனுடைய கரத்தின் சிருஷ்டிகளாய் இருக்கும் உங்களுக்கும் எனக்கும் இயேசுவின் இரத்தத்தின் மூலம் நமக்கு சொந்தமாக்கினார், அவர் திரும்ப வந்து இந்த பூமியை நித்தியமாய் அரசாள்வார் என்பதையே புதிய ஏற்பாடு சொல்கிறது...

பைபிளின் நம்பகத்தன்மை
கிறிஸ்தவர்களாகிய நாங்கள் பயன்படுத்தும் பைபிளின் பழைய ஏற்பாடு இன்றைக்கும் இந்த உலகத்தில் வாழும் யூதர்களின் வேதமான தோரா ஆகும், கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவுக்காக அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று இன்றும் மேசியாவின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கும் யூதர்களின் வேதமே சாட்சி, இயேசுவை கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் இன்றும் பூமியில் இருக்கிறார்கள் அவர்களிடம் உள்ள வேதமும் பைபிளின் பழையேற்பாடும் ஒன்றே.. ஆகவே பைபிளின் பழைய ஏற்பாடு கிறிஸ்தவர்களால் திருத்தப்படவில்லை என்பது தெளிவாக விளங்குகின்றது.

புதிய ஏற்பாடு நம்பகத்தன்மை..

பைபிளில் புதிய ஏற்பாடு என்பது கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உரியது ஒருவேளை இதை கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக மாற்றியிருக்கலாம் என்ற ஐயம் எழுவது இயற்கையே ஆனால் பழங்கால நூல்களின் நம்பகத் தன்மையை ஆராயும் மூலப் பிரதி விமர்சன அறிவியல் இந்த விசயத்தில் நமக்கு உதவி செய்கின்றது.

மூலப்பிரதி விமர்சன அறிவியல் என்பது என்ன?
இது பழங்கால நூல்களில் இடைச்செறுகல்கள் உள்ளதா என்பதைக் குறித்து ஆராய்ந்து அதில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையா என்பதை தெளிவாக்கும் ஒரு தற்கால தொல்பொருள் துறை நுட்பம் ஆகும்,

இது எப்படி செயல்படுகின்றது?
ஒரே கருத்துக்கள் சொற்றொடர்கள் உள்ள பழங்கால நூல்களின் பிரதிகள் எத்தனை அதிகமாகவும், எத்தனை பரவலாகவும்(நிலப்பரப்பில்) கிடைக்கின்றது என்பதையும், எழுதப்பட்ட கால அளவுக்கும் நமக்குக் கிடைத்திருக்கும் பிரதியின் கால அளவுக்குமான வித்தியாசம் எத்தனை குறைவு போன்ற அளவீடுகளைக் கொண்டு அதன் உண்மைத் தன்மையை அறியும் அறிவியல் முறையாகும், இந்த அடிப்படையிலேயே பழங்கால நூல்கள் ஆராயப்பட்டு உலகத்தின் வரலாறு எழுதப்படுகின்றது

பைபிள் புதிய ஏற்பாட்டில் மூலப்பிரதி விமர்சன அறிவியல்

இந்த தொல்பொருள் துறை நுட்பத்தைக் கொண்டு பைபிளின் மூலப் பிரதிகளை ஆராய்ந்த முடிவுகளை இங்கு குறிப்பிடுவது அவசியம், பைபிளின் புதிய ஏற்பாடு மிகச்சரியாக இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதழுக்குப் பின் 16 ஆண்டுகளுக்குப் பின் எழுத ஆரம்பிக்கப்பட்டது (கொலேசியர் நிரூபம்) இறுதி நூலான வெளிப்படுத்தல் கி.பி 94 ல் முடிக்கப்பட்டது. தோராயமான கணக்கில் கி.பி 30க்கும் கி.பி 100க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது என்று வைத்துக் கொள்வோம்..

நமக்குக் கிடைத்திருக்கும் மூலப்பிரதிகளின் எண்ணிக்கை மற்றும் எழுதப்பட்ட கால அளவு

பைபிளின் மூலப்பிரதிகள் அன்றைய சபைகளுக்கு பல்வேறு கையெழுத்துப் பிரதிகளாக எழுதப்பட்டு கொண்டு செல்லப்பட்டது அதன் பரப்பளவு அரேபியா துவக்கி பாலஸ்தீனா, சிரியா, துருக்கி, கிரீஸ், இத்தாலி, சிசிலி, சைப்ரஸ், மால்டா போன்ற மத்திய தரைக்கடல் எல்லையில் அமைந்திருக்கும் அத்தனை நாடுகளின் முக்கிய நகரங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டது அதில் சிதிலமடைந்தது போக நமக்குக் கிடைத்திருக்கும் அளவு என்ன வென்று தெரியுமா?

கி.பி 130 என்ற தேதியில் யோவான் எழுதிய சுவிசேசம் ஒரு பகுதி பிரதியும், ஆதித் திருச்சபை பிதாக்களின் எழுத்துக்களில் 36,000க்கும் மேற்பட்ட மேற்கோள்கள், கிரேக்க மொழியில் 5000+ லத்தீன் 10,000+ பிற மொழிகளில் 9300+ என்று கிட்டத்தட்ட 25000க்கும் மேற்பட்ட மூல கையெழுத்துப் பிரதிகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இதில் ஆதித் திருச்சபை முற்பிதாக்களின் மேற்கோள்களின் தொகை சேர்க்கப்படவில்லை.. இவை அனைத்திலும் சொல்லப்படுகின்ற செய்திகள் ஒன்றாகவே இருக்கின்றன, ஒரு சில பிரதிகளில் மாத்திரம் ஒரு சில வசனங்கள் விடுபட்டிருந்தன ஆனாலும் அவைகளிலும் சொல்லப்படுகின்ற செய்திகளில் முரன்பாடு இல்லை

தற்போது கிடைத்திருக்கும் பிரதிகள் எழுதப்பட்ட காலம்

நாம் முன்னமே புதிய ஏற்பாடு கி.பி 100க்குள் எழுதப்பட்டிருக்கலாம் என்று பார்த்தோம், கிபி 327 ஆம் ஆண்டில் பிஷப் அக்னேசியஸ் தலைமையில் கூடிய டிரெண்ட் மன்றம் புதிய ஏற்பாட்டு நூல்களை இறுதி செய்தது என்று வரலாறு நமக்குச் சொல்லுகின்றது. அதாவது எழுதப்பட்ட காலத்துக்கும், நமக்குக் கிடைத்திருக்கும் காலத்துக்குமான இடைவெளி அதிகப் பட்சமாக 300 ஆண்டுகளாகும்,

இந்தக் கால இடைவெளி நம்பகத் தன்மை வாய்ந்ததா?

உலக வரலாற்றைத் தொகுத்தெழுத உதவிய மூலப்பிரதி விமர்சன அறிவியல் முறையில் மற்ற வரலாற்று நிகழ்வுகளை தொகுக்கும் போது மேற்சொன்ன எழுதப்பட்ட கால அளவுக்கும், நமக்கு கிடைக்கப்பெற்ற பிரதியின் கால அளவுக்குமான வேறுபாடு பைபிளைப் பொறுத்தவரை மிகவும் குறைவாகும்...

ஆனாலும் மற்ற தொன்மையான நூல்களைக் காட்டிலும் எண்னிக்கையிலும், பரப்பளவிலும் பைபிளே முதலிடம் பிடித்து சந்தேகத்துக்கு இடமில்லாமல் தன் உண்மைத் தன்மையை பறைசாற்றுகின்றது. இது குறித்த இன்னும் தெளிவான ஒப்பீட்டு அட்டவனை இங்கே உள்ளது

பைபிளின் மூலப்பிரதிகள் எங்கே உள்ளன?
மேலே சொன்ன 25000 (இருபத்தி ஐந்தாயிரம்) க்கும் மேற்பட்ட பைபிளின் மூலப் பிரதிகள், ஆதித்திருச்சபை முற்பிதாக்களின் மேற்கோள்களில் உள்ள 36000( முப்பத்தி ஆறாயிரம்)க்கும் மேற்பட்ட குறிப்புகள் ஆகியவை இலண்டன் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

கி.பி 327ல் டிரெண்டு மன்றம் புதிய ஏற்பாட்டு நூல்களை இறுதி செய்த பின்பு கி.பி350 தேதியிடப்பட்ட முழுமையான பைபிள் புதிய ஏற்பாட்டு நூல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

அதாவது எழுதப்பட்ட காலத்துக்கும் நம் கண் முன்னால் இலண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் பிரதிகளுக்கும் இடையிலான வித்தியாசம் அதிகப்பட்சம் 300 ஆண்டுகளே.. பழங்கால நூல்களில் பைபிளே இத்தகு குறுகிய கால அளவுடன், ஒரே கருத்துடன் கூடிய ஆயிரக்கணக்கான பிரதிகள் மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா கிழக்கு மற்றும் தெற்கு ஐரோப்பா என்று பரந்த நிலப்பரப்பில் கிடைத்து சாதனை படைத்திருக்கின்றது.

இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் இஸ்லாம் கைக்கூலிகள் தங்கள் பிழைப்புக்காக பைபிள் திருத்தப்பட்டது, மூலப்பிரதிகள் இல்லை என்றெல்லாம் பொய்சொல்லி வயிறு வளர்க்கிறார்கள். அதை இஸ்லாமியர்கள் கூட நம்பி ஏமாறவேண்டாம் என்பதே எங்கள் தாழ்மையான விருப்பம்..

தங்களுடைய அடுத்த கேள்வியான‌
3. உலகில் பல பைபிள் இருப்பது ஏன்?
க்கான பதில் கர்த்தருக்கு சித்தமானால் விரைவில்... அதற்கு முன்பாக கீழ்கண்ட கட்டுரைகளைப் படிக்கவும்...

உலக மொழிகளில் பைபிள்

ஆங்கிலத்தில் பைபிள்

பைபிளில் மறைக்கப்பட்ட நூல்கள்

Post a Comment

0 Comments