Header Ads Widget

Responsive Advertisement

23. ரூத்


கானானில் பஞ்சம்
இஸ்ரவேல் மக்களை நியாதிபதிகள் நியாயம் விசாரிக்கும் நாட்களில் கானானில் பஞ்சம் உண்டானது. அப்போது பெத்தலகேம் ஊரைச் சேர்ந்த எலிமெலேக்கு என்ற மனிதன் தன் மனைவி நகோமி மற்றும் இரு மகன்கள் மக்லோன். கிலியோன், ஆகியோருடன் போவாப்பில் குடியேறினான்.

நகோமி அனாதையானாள்
சில நாள் கழித்து எலிமெலேக்கு மரித்தான். அவனது இரு மகன்களும் போவாப்பைச் சேர்ந்த பெண்களையே மணம் முடித்தனர், அவர்களின் பெயர்கள், ஓர்பாள், மற்றும் ரூத், ஆகும். அவர்கள் நலமுடன் பத்து ஆண்டுகள் வாழ்ந்தார்கள். ஒரு நாள் நகோமியின் இரு மகன்களும் மரித்துப் போனார்கள். அப்போது நகோமியும் அவளது மருமக்களும் கவலையடைந்தார்கள்.

பெத்லகேமிற்கே திரும்பினார்கள்

நகோமி தன் மருமகள்களிடம் நீங்கள் உங்கள் தாய் வீட்டிற்க்கே திரும்பப்போய் வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளுங்கள். என்று சொன்னாள், முதலில் அவர்கள் மறுத்தாளும் ஓர்பாள் என்ற பெண் தன் தகப்பன் வீட்டிற்கு சென்றுவிட்டாள். ஆனால் ரூத் மட்டும் எவ்வளவு சொல்லியும் தன் தகப்பன் வீட்டுக்கு போகவில்லை. அவள் தன் மாமியார் நகோமியுடனே வாழ்ந்துவந்தாள்.பிற‌கு ரூத்தும் நகோமியும் திரும்பவும் தங்கள் சொந்த ஊரான பெத்தலகேமிற்கே போனார்கள்,

ரூத் கோதுமை சேகரிக்கச் சென்றாள்

அங்கே ரூத் தனக்கும் தன் மாமிக்கும் உணவுக்காக தன் மாமனாரான எலிமெலேக்கின் உறவுக்காரன் போவாஸ் என்ப‌வனது கோதுமை வயலில் அறுப்பின் போது சிதறிவிழும் மணிகளை சேகரிக்கப் போனாள்.ரூத் யாரென்று தெரிந்து கொண்டதால் செல்வந்தனான போவாஸும் தன் வேலைகாரர்களிடம் ரூத்திற்கு இற்க்கம் காட்டச் சொன்னான். மாலையில் வீட்டிற்குச் சென்று ரூத் நடந்தவைகளை தனது மாமி நகோமியிடம் சொன்னாள். நகோமி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். இன்று இரவே நீ போவாஸ் வீட்டிற்கு போய், உன்னை அவன் மனைவியாக்கும் படி கேள் என்று அனுப்பிவிட்டாள்,

போவாஸுடன் திருமணம்
ரூத் இரவில் போவாசிடம் சென்று நகோமி சொன்னதைச் சொன்னாள், அதற்கு போவாஸ், நான் திருமணம் ஆகாதவன் தான், ஆனால் என்னைவிட சிறந்த ஒரு நன்பனும் திருமணமாகாமல் இருக்கிறான், அவனிடம் நாளை இது பற்றி பேசுகிறேன். அவன் ஒருவேளை உன்னைத்திருமணம் செய்ய மருத்தால் நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குப்பன்னினான். மறுநாள், போவாஸ் தன் நன்பனை அழைத்தான், மேலும் அந்த ஊரின் பெரிய மனிதர்கள் ப‌த்துப் பேரையும் அழைத்தான். பின்பு தன் நன்பனிடம் நமது உறவுகாரனான எலிமெலேக்கின் நிலம் போவாப்பில் உள்ளது. அதை நீ வாங்கிக்கொள்கிறாயா அப்படி நீ வாங்கிக்கொண்டால் அவனது மருமகளான ரூத்தையும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றான். அவனது நன்பன் மறுத்தான்,மேலும் அவன் ஏன் நீயே அதை வாங்கிக்கொள்ளக்கூடாது என்று கேட்டான்.

பெத்லகேம் மக்களின் வாழ்த்து

போவாஸும் சரி நானே வாங்கிக்கொள்கிறேன் அதற்கு இந்த ஊர்ப் பெரியவர்களே சாட்சி என்றான். ஊர்ப் பெரியவர்களும் அதை வழிமொழிந்தார்கள். பின்பு போவாஸ் ரூத்தை திருமணம் செய்து கொண்டான். அப்போது கூடியிருந்த பெத்லகேம் மக்கள் ரூத்தை ஆபிரகாம் மனைவி சாராள் போலவும், யக்கோபின் மனைவி ராகேலைப் போலவும் வாழ்க என்று வாழ்த்தினார்கள்

அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் ஓபேத் ஆகும்.
ஓபேத் தாவிது அரசனின் தாத்தா ஆவார்.

Post a Comment

0 Comments