Header Ads Widget

Responsive Advertisement

24. சாமுவேல்


அன்னாள்
எப்பிராயீம் மலைப்பிரதேசத்தில் சேரப்பீம் என்ற ஊரில் எல்க்கானா என்பவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குக் குழந்தைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ குழந்தைகள் இல்லை. ஆனாலும் அன்னாளின் கனவன் அவள் மீது மிகவும் அன்பு வைத்திருந்தான், பெனின்னாள் அன்னாளை பார்த்து; அடிக்கடி குழந்தைகள் இல்லாததைச் சொல்லி நொகடித்துக் கொண்டிருந்தாள். இதனால் அன்னாள் மனம்கசந்து அழுவாள். அவள் கனவன் அவளை ஆறுதல் படுத்துவான்.

அன்னாளின் பொருத்தனை

அந்த எல்க்கானா வழக்கமாக‌ சீலோ என்ற ஊருக்கு கடவுளைப் பணிந்து கொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருட‌ந்தோறும் போய்வருவான்; அவனோடு அவனது இரண்டு மனைவிகளும் மற்றும் பிள்ளைகளும் அவனோடு கூடப் போவார்கள். அங்கே கடவுளின் பணிவிடைக்காரன் ஏலியும் அவனது இரன்டு மகன்களான‌ ஓப்னியும் பினெகாசும் இருந்தார்கள்.ஒரு முறை சீலோவிற்கு அவர்கள் சென்ற போது அன்னாள் கடவுளின் ஆலய வாசலில் போய் அமர்ந்து கடவுளிடம் தன் குறையைச் சொல்லி அழுதாள். மேலும் அவள் தனக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தால் அதை உயிருள்ள நாளெல்லாம் கடவுளுக்கே அர்பணிப்பேன் என்று பொருத்தனை பன்னிக்கொன்டாள்.

சாமுவேல் பிறந்தான்
கடவுள் அன்னாளின் வேண்டுதலைக் கேட்டார், அவளுக்கு மணமிறங்கினார். அவளுக்கு ஒரு அழகான ஆண்குழந்தையை கொடுத்தார். அக்குழந்தைக்கு சாமுவேல் என்று பெயரிட்டார்கள். பின்பு அக்குழந்தை பால் மறக்கும் நாள்வரை தன் பெற்றோரிடத்தில் இருந்தது, அதன் பிறகு அக்குழந்தை கடவுளின் ஆலயத்தில் உள்ள பணிவிடைக்காரன், ஏலியிடம் கடவுளுக்காய் ஒப்புக்கொடுக்கப் பட்டது.

ஏலிக்கு சாபம்

ஏலிக்கு இருந்த இரன்டு மகன்களும் கடவுளைப்பற்றி அறியாதவர்களாய் துன்மார்க்கமான வழிகளில் நடந்தனர். இதனால் ஏலியைப் பார்த்து கடவுள் மற்றொரு கடவுளின் பணிவிடைக்காரன் முலமாய்; உன் வம்சத்தார் அனைவரும் வாழும் வயதில் சாவார்கள். உன் பிள்ளைகள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள்; மேலும் உன் குடும்பத்தில் மீதியாய் வாழும் மக்களும் வறுமையில் வாடுவார்கள் என சபித்தார்.சாமுவேல் சிறு பிள்ளையாய் ஏலிக்கு உதவிகள் செய்து வந்தான், அவன் தாய் மேலும் மூன்று ஆண்பிள்ளைகளையும், மூன்று பெண் பிள்ளைகளையும், பெற்றாள் வருடாவருடம் சீலோவிற்கு அவள் வரும் போது தன் மகன் சாமுவேலுக்கு சிறிய அழகான வண்ண உடைகள் கொன்டுவருவாள். சாமுவேல் க‌ட‌வுளுக்கு பயந்த பிள்ளையாய் வாழ்ந்து வ‌ந்தான்.

சாமுவேலுக்கு கடவுள் இடைப்பட்டார்

ஒருநாள் இரவு சாமுவேலிடம் கடவுள் இடைப்பட்டார். அவர் அவனை நோக்கி சாமுவேலே என்று கூப்பிட்டார், உடனே ஏலிதான் கூப்பிட்டதாக நினைத்து அவனிடம் ஓடி வந்தான். உடனே ஏலி அது கடவுளின் குரல் என்பதை அறிந்து; சாமுவேலிடம் மீண்டும் உனக்கு குரல் கேட்டால் “சொல்லும் ஆண்டவரே அடியேன் கேட்கிறேன்”. என்று சொல் என்றார். சாமுவேலும் அப்படியே சொன்னான். அப்போது கட‌வுள் அவனிடம் நான் ஏலியின் குடும்பத்திற்கு விரோதமாய்ச் சொன்ன யாவையும் உடனே நிறைவேற்றுவேன் என்று சொன்னார்.காலையில் சாமுவேல் கடவுள் சொன்னதை ஏலியிடம் சொல்ல பயந்தான். ஏலி அவனிடம் மிகவும் வருந்திக் கேட்டுக்கொன்டதால் அவைகளை ஏலியிடம் சொன்னான். அதற்கு ஏலி கடவுளின் சித்தப்படி செய்யட்டும் என்று சொன்னான்.

ஏலியின் மரணம்

ஒரு முறை பெலிஸ்த்தியர்கள் இஸ்ரவேலர்கள் மீது படையெடுத்து வந்தார்கள். அப்போது பெரும் போர் மூன்டது இஸ்ரவேல் மக்கள் ஏலியின் மகன்களிடம் போர்க்களத்திற்கு உடன்படிக்கைப் பெட்டியைக் கொன்டுவரச் சொன்னார்கள்.ஏலியின் மகன்களும் அப்படியே செய்தனர். ஆனால் போர்க்களத்தில் இஸ்ரவேல் மக்கள் சிதறடிக்கப்பட்டார்கள். இஸ்ரவேலர்கள் பலரை பெலிஸ்த்தியர்கள் கொன்றுபோட்டார்கள்.
அப்போது ஏலியின் மகன்களும் பலியானார்கள். இதைக் கேள்விப்பட்ட ஏலி உடனே மல்லாக்க விழுந்து மரித்தான்.

சாமுவேல் தீர்க்கதரிசியானான்
சாமுவேல் வளர்ந்து பெரியவனானான்; கடவுள் அவனுடனே கூட இருந்தார், அவர் சாமுவேல் மூலமாய்ச் சொன்ன தம்முடைய எல்லா வார்த்தைகளில் ஒன்றையும் பொய்த்துப் போகுமாறு செய்யவில்லை. சாமுவேல் கடவுளுடைய தீர்க்கதரிசி என இஸ்ரவேல் நாடு முழுவதும் அறியும்படி கடவுள் செய்தார். கடவுள் சாமுவேலின் ஆயுள் முழுவதும் இஸ்ரவேல் மக்களிடத்தில் தம்மை சாமுவேல் மூலமாகவே வெளிப்படுத்தினார்.

Post a Comment

0 Comments