Header Ads Widget

Responsive Advertisement

32.எலிசா


எலியா பரலோகத்திற்கு உயிரோடு எடுத்துக்கொள்ளப்படுதல்
எலியா தீர்க்கதரிசி கில்கா எனற இடத்தில் தங்கியிருந்த போது தன்னுடைய வேலைக்காரன் எலிசாவிடம் ‘நீ இங்கேயே இரு, கடவுள் என்னை பெத்தேல் மட்டும் போகுமாறு அழைக்கிறார்’. எனச் சொன்னான். ஆனால் எலிசாபிடிவாதமாக ‘நான் உங்களை விட்டு எங்கும் செல்லமாட்டேன் உங்களோடுதான் வருவேன் என்றான்’. பிறகு அவனைக் கூட்டிக்கொண்டு பெத்தேலுக்குப் போனான். பின்பு அவன் எரிகோவிற்கு போனான். இவ்விடங்களில் இருந்த தீர்க்கதரிசிகளின் மகன்கள் எலிசாவிடம் ‘உன் எஜமான் எலியா இன்று பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் படுவார் உனக்குத் தெரியுமா? எனக் கேட்டார்கள். அதற்கு எலிசா எனக்குத் தெரியும் நீங்கள் சும்மாயிருங்கள் என அதட்டினான். பின்பு கடவுளின் உத்தரவுப்படி எலியா யோர்தான் வரை போனான், எலிசாவும் அவனோடு போனான். யோர்தான் ஆற்றின் அருகில் வந்தவுடன் தன் சால்வையை எடுத்து முற்க்கி நதி மீது அடித்தான் அப்பொது நதி இரன்டாகப் பிளந்தது எலியாவும் எலிசாவும் அதன் வழியே நடந்து யோர்தானைக் கடந்தார்கள்.

எலிசாவுக்கு ஆசீர்வாதம்

எலியா தன் வேலைக்காரன் எலிசாவை நோக்கி நான் எடுத்துக்கொள்ளப்படும் முன் நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன எனக்கேட்டான். அதற்கு எலியா உம்மிடம் உள்ள ஆவியின் வரங்களைப்போல் எனக்கு இரண்டு மடங்கு வேண்டும் எனக்கேட்டான். அதற்கு எலியா, நீ நான் எதுத்துக் கொள்ளப்படும் போது என்னைப் பார்த்தால் உனக்கு நீ கேட்டது கிடைக்கும் எனச் சொன்னான். இருவரும் பேசிக்கொண்டே செல்லும் போது வானத்திலிருந்து வந்த அக்கினி ரதமும் குதிரைகளும் அவர்களை இரன்டாகப் பிரித்தது. அப்போது எலிசாவின் கண் முன்னால் எலியா சுழல் காற்றினால் பரலோகத்திற்குக் கொன்டுபோகப்பட்டான். அன்று முதல் எலிசா தேவ ஆவியினால் நிரப்பப்பட்டு கடவுளின் ஊழியக்காரனாக மாறினான்.

ஒலிவ‌ எண்ணெய் அற்புத‌ம்
தீர்க்க‌த‌ரிசிக‌ளின் ம‌க‌ன்க‌ளில் ஒருவ‌ன் ம‌ரித்துப்போனான், அவ‌ன் ம‌னைவி எலிசாவிட‌ம் வ‌ந்து த‌ன் வ‌றுமைநிலைமையையும் கடன் பற்றியும் கூறினாள். எலிசா அவ‌ளிட‌ம் உன் வீட்டில் என்ன‌ இருக்கிற‌து என‌க் கேட்டான். அத‌ற்கு அப்பெண் என்வீட்டில் ஒருகுட‌ம் ஒலிவ‌ எண்ணெய் ம‌ட்டுமே இருக்கிற‌து எனக் கூறினாள், அத‌ற்கு எலிசா நீ போய் ப‌க்க‌த்துவீடுக‌ளில் பாத்திர‌ங்க‌ளை வாங்கிவ‌ந்து க‌த‌வைப் பூட்டி அப்பாத்திர‌ங்க‌ளில் உன்னிட‌ம் உள்ள‌ எண்ணெய்யை ஊற்று என்று சொன்னான். அவ‌ளும் அப்ப‌டியே செய்தாள். எல்லாப்பாத்திர‌ங்க‌ளும் நிறைந்த‌வுட‌ன் எலிசாவிட‌ம் சென்று ந‌ட‌ந்த‌ எல்லாவ‌ற்றையும் சொன்னாள் எலிசா அந்த‌ எண்ணெய்க‌ளை விற்று உன் க‌ட‌ன்க‌ளை அடை மீத‌ம் உள்ள‌ எண்ணெயை விற்று பிழைத்துக்கொள் எனக் கூறினான் அவ்வேழைப் பெண்னும் ம‌கிழ்ச்சியுட‌ன் வீடு திரும்பினாள்.

ம‌ரித்த‌ம‌க‌ன் பிழைத்தான்.
எலிசா ஒருமுறை சூனெம் ப‌ட்ட‌ண‌த்திற்கு போன‌போது ஒருபெண் அவ‌னை விருன்திற்கு அழைத்தாள், மேலும் அவ‌ள் எலிசா எப்போது வேண்டுமானாலும் வ‌ந்து த‌ங்கிச் சொல்ல‌ ஒரு அறை வீட்டைக் க‌ட்டிக் கொடுத்தாள் அப்போது எலிசா அப்பெண்ணிடம் உன‌க்கு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டான். அத‌ற்கு அப்பெண் என‌க்குக் குழ‌ந்தையில்லை என்க‌ன‌வ‌னும் வய‌துசென்ற‌வ‌னாய் இருக்கிறான் என‌ச்சொன்னாள். எலிசா அவ‌ளிட‌ம் உன‌க்கு உற்பத்திகாலத்தில் குழந்தை பிற‌க்கும் என‌ச் சொன்னான். முத‌லில் அப்பெண் ந‌ம்பவில்லை, ஆனால் எலிசா சொன்ன‌படியே அவ‌ளுக்கு ஒரு ஆண்குழ‌ந்தை பிற‌ந்தது, ஒரு நாள் அக்குழ‌ந்தை த‌லைவ‌லிக்கிற‌து
என‌ச்சொல்லி கீழேவிழுந்து ம‌ரித்துப்போன‌து. மீண்டும் எலிசாவிட‌ம் அப்பெண் முறையிட்டாள், எலிசா வ‌ந்து ம‌ன்றாடி ஜெபித்து த‌ன் வாய், அச்சிறுவ‌னின் வாயிலும் முக‌ம் கைக‌ள் என‌ அனைத்தும் அச்சிறுவ‌னின் மீது ப‌டும் வ‌கையில் அச்சிறுவ‌னின் மேல்ப‌டுத்துக் கொன்டான். அப்போது அச்சிறுவ‌ன் உயிரோடு எழுந்தான்.

நாக‌மானின் வியாதி குண‌மான‌து
சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் பராக்கிரமசாலி ஆனால் அவன் குஷ்டரோகியாயிருந்தான். அவ‌ன் இஸ்ர‌வேலில் உள்ள‌ எலிசாவால் த‌ன்னை குண்மாக்க‌ முடியும் என‌ அறிந்து குதிரைகளோடும் ரதத்தோடும் எலிசாவிடம் வ‌ந‌தான். எலிசா அவ‌னிட‌ம் நீ போய் யோர்தான் ஆற்றில் ஏழுமுறை குளி என‌ அறிவித்தான். நாக‌மான் ந‌ம்பிக்கைய‌ற்று இருக்கையில் அவ‌ன‌து வேளைக்கார‌ன் கேட்டுக் கொண்டதால் யோர்தான் ஆற்றில் குளித்தான். அப்போது அதிச‌ய‌ப‌ட‌த்த‌க்க‌வித‌ மாய் அவ‌ன‌து நோய் வில‌கியது.

கேயாசிக்கு சாபம்
நாக‌மான் குண‌ம‌டைந்த‌வுட‌ன் இஸ்ர‌வேல் தேவ‌னே உண்மையான‌ தேவ‌ன் என‌ அறிகையிட்டான். பின்பு எலிசாவுக்கு காணிக்கைக‌ளை அவ‌ன் கொடுத்தான். ஆனால் எலிசா அதை வாங்க‌ ம‌றுத்துவிட்டான். பின்பு நாகமான் தன் நாட்டிற்கு திரும்ப புறப்பட்டான். அப்போது எலிசாவின் வேலைக்கார‌ன் கேயாசி நாக‌மானின் ர‌த‌ம் போய்க்கொண்டிருக்கும் போது கேயாசி ஓடிப்போய் த‌ந்திர‌மாக‌ காணிக்கைக‌ளை வாங்கிக்கொண்டான் அதை அறிந்த‌ எலிசா கேயாசியை நாக‌மானின் குஸ்ட‌ரோக‌ம் உன‌க்கும் உன் ச‌ந்த‌திக‌ளுக்கும் வ‌ருவ‌தாக‌ என‌ச்ச‌பித்தான்.

இரும்பு மிதந்தது
தீர்க்கதரிசிகளின் மகன்கள் கல்மேல் பருவதத்தில் இட நெருக்கடி இருக்கிறது என எலிசாவிடம் யோர்தான் ஆற்றின் ஓரமாய் வீடுகட்டி வசிக்க மரம்வெட்ட எலிசாவையும் அழைத்துக் கொண்டு போனார்கள். அங்கே ஒருவனுடைய இரும்புக் கோடாலி யோர்தான் ஆற்றில் விழுந்தது, அப்போது எலிசா அந்த மர வெட்டியிடம் நீ அக்கோடாலி விழுந்த இடத்தில் ஒரு மரக்கிளையை வெட்டிப்போடு என்று சொன்னான். மரவெட்டியும் அப்படியே ஒரு கிளையை வெட்டி ஆற்றில் போட்டான். உடனே அந்த இரும்புக்கோடாலி மிதந்தது அப்போது அக்கோடாலியை அவன் எடுத்துக்கொண்டான்.

Post a Comment

0 Comments