Header Ads Widget

Responsive Advertisement

33. யோவாஸ்


அகசியாவின் மரனமும் தாயின் கோபமும்
அகசியா என்ற மன்னன் தந்திரமாகக் கொல்லப்பட்டான். இதனால் அவனது தாயாகிய அத்தனியாள் மிகவும் கோபமடைந்தாள், இதனால் அவள் அரன்மனையிலுள்ள ராஜ குடும்ப‌த்தைச்சேர்ந்தவர்களை கொலை செய்தாள், அப்போது யோவாஸ் குழந்தையாய் இருந்தான், அவனை அகசியாவின் சகோதரி யோசேபாள் என்பவள் ரகசியமாய் கடவுளுடைய ஆலயத்தில் மறைத்து வைத்து வளர்த்து வந்தாள்.

யோவாஸ் முடிசூட்டப்பட்டான்
யோவாஸ் ஏழு வயதாக இருந்த போது அவனை வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்தி, அவனை அரன்மனைக்கு யோசேபாள் அழைத்து வந்தாள் பிறகு யோவாசுக்கு மன்னனாக முடிசூட்டப்பட்டது. அப்போது மக்களெல்லாரும் அரசன் வாழ்க!! வாழ்க!! என முழங்கினார்கள், அப்போது அத்தனியாள்: யோவாஸ் முடி சூட்டப்பட்டதை அறிந்து துரோகம் துரோகம் எனப் புலம்பினாள். பிறகு அவள் யோவாசை கொலை செய்யாதபடிக்கு அரன்மனைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப் பட்டாள்.

அன்னிய தெய்வங்களின் கோவில்கள் இடிக்கப்பட்டன‌
யோவாசி ஆட்சிகாலத்தில் மக்கள் இஸ்ரவேலின் கடவுளைப் பின்பற்ற அரசனும் மக்களும் உடன்படிக்கை பன்னிக்கொண்டு தங்கள் தேசம் முழுவதிலும் கட்டப்பட்ட அன்னிய தெய்வமாகிய பாகாலின் கோவில்கள் அனைத்தும் இடித்து தரமட்டமாக்கப் பட்டது.

எருசலேம் தேவாலயம் பழுதுபார்க்கப்பட்டது

பின்பு யோவாஸ் இஸ்ர‌வேல் க‌ட‌வுளின் ஆல‌ய‌த்தை நிர்வகிக்க‌ அதிகாரிக‌ளை நிய‌மித்தான். யோவாஸின் ஆட்சியில் ம‌க்க‌ள் நிம்ம‌தியாக‌ இருந்தார்க‌ள் தேச‌ம் அமைதியாக‌ இருந்த‌து. ஆனாலும் க‌ட‌வுளின் ஆல‌ய‌ம் அந்நாள்வ‌ரையிலும் ப‌ழுது பார்க்க‌ப்ப‌ட‌வில்லை, ஆல‌ய‌த்தின் நிர்வாக‌ அலுவ‌ல‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குத் தெரிந்த‌வ‌ர்க‌ளிட‌ம் நிதியுத‌வி பெற்று ஆல‌ய‌த்தில் ப‌ழுது ஏற்ப‌ட்ட‌ இடங்க‌ளை ச‌ரி செய்ய‌ முற்ப‌ட்ட‌ன‌ர், இதைய‌றிந்த‌ யோவாஸ் தெரிந்த‌வ‌ர்க‌ளிட‌ம் நிதியுத‌வி பெறுவ‌தை விட ஆல‌ய‌த்திற்கு வ‌ருகின்ற‌வர்க‌ளிட‌மே நிதி பெற‌ வ‌ச‌தியாக‌ ஒரு பெட்டியின் மூடியில் நான‌ய‌ங்க‌ளை போடும‌ள‌வு துளை ஏற்ப‌டுத்தி ஆல‌ய‌ நுழைவாயிலின் வலது பக்கம் வத்தான்.

Post a Comment

0 Comments