Header Ads Widget

Responsive Advertisement

சாத்தானின் தந்திரங்கள் (பாகம் 1)

பிரியமானவர்களே படைப்பின் இரகசியங்கள் தொடரில் நம்முடைய உண்மையான எதிரி யார் என்பதை சென்ற பதிவில் அறிந்து கொண்டோம், அவனுடைய குணநலன்கள் சிலவற்றையும் நாம் பார்த்தோம், அந்த சாத்தான் எனப்படுகிற நம்முடைய எதிரியானவன், பூமியில் விழத்தள்ளப்பட்ட ஒரு தூதன் அப்படி விழத் தள்ளப்படும் போது மூன்றில் ஒருபங்கு தேவதூதர்களும் அவனோடு கூடத் தள்ளப்பட்டார்கள் என்பதை தேவதூதர்களும் பிசாசும் என்ற கட்டுரை மூலமாக நாம் அறிந்து கொண்டோம்.

இந்தப் பிசாசின் பலங்கள் என்ன?

பொய்யால் ஆளைமயக்கும் திறமை
உங்கள் உண்மையான அறிந்துகொள்ளுங்கள் என்ற கட்டுரையில் அவனுடைய குணநலன்களை நாம் அறிந்து கொண்டோமல்லவா? அவனுடைய குணநலன்களில் மிகவும் முக்கியமானது பொய் என்பது ஆகும், அவன் பொய்க்கு பிதாவாக இருக்கிறவன். அவன் சொல்லும் பொய்யில் உண்மையையும் கலந்து சிக்கலாக பொய்யை தன் சொந்தத்தில் உருவாக்கிப் பேசும் திறமையுள்ளவன்.

எப்படியெனில் மனிதனின் முதல் பாவமான விளக்கப்பட்ட கனியை ஏவாளிடம் பேச முற்படும் போது, நீங்கள் அந்தக்கனியை சாப்பிட்டால் சாகமாட்டீர்கள் மாறாக உங்கள் கண்கள் திறக்கப்பட்டு தேவர்களைப் போல ஆவீர்கள் என்றும் சொன்னது, இதில் பாதி உண்மை பாதி பொய்? எப்படியெனில் கண்கள் திறக்கப்படுவது உண்மை அதே நாளில் மனிதன் அதை உட்கொண்டால் நித்தியமாக வாழ முடியாது அவன் மரிப்பான் என்று தேவன் சொல்லியிருந்தார், ஆனால் சாத்தானோ அந்த உண்மையை மறைக்க நன்மையான ஒன்றை சொல்லி மரிப்பதையும் மறுத்து பொய் சொல்லுகிறான்.

இன்றும் அப்படித்தான் பிரியமானவர்களே, சாத்தான் நாம் விழவேண்டும் என்பதற்காக நன்மையான ஒன்றைக் காட்டி அதில் நம்மை விழத்தள்ளி தீமைக்கு நம்மை ஒப்புக் கொடுக்கிறான்.

மனிதனைவிட அதிக சக்தியுடையவன்,
சாத்தான் மனிதனைவிட பலமானவனும், மனிதனை எளிதில் வீழ்த்தக்கூடியவனாகவும் இருக்கிறான். பலம் என்றால் உடல் வலிமை அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும் அவன் போராடுவது மனிதனின் மனதோடு மட்டுமே, ideal mind is devil's workshop ‍ ‍என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு, ஒரு மனிதனுடைய மனது கசப்பு, விரோதம், பொறாமை, புகழ்தேடுவது, சண்டைகள், வைராக்கியங்கள், கோபங்கள், பிரிவினைகள், அசுத்த சிந்தனைகள், விபச்சார எண்ணங்கள், ஆகியவற்றால் மனது ஆட்படும்போது சாத்தான் கிரியை செய்ய ஆரம்பிக்கிறான். அவன் இந்த சிந்தனைகளை வளர தூண்டுகிறான். இப்படித் தூண்டப்பட்ட மனிதன் தன்னுடைய நிலையை மறந்து பிசாசின் ஆலோசனைகளைக் கேட்க ஆரம்பித்து அதன்படி செய்ய ஆரம்பித்து பின்பு தீமையில் சிக்கிக் கொள்கிறான்.

அதோடு மட்டுமல்ல ஏதாவது தவறு செய்துவிட்ட உடனே இனி அவ்வளவுதான் என்று ஆலோசனை சொல்லி தற்கொலைக்கும், கொலையையும், தூண்டுகிறவனாக இருக்கிறான்


மனிதனை விட அனுபவம் மிக்கவன்
சாத்தான் மனிதனைவிட அதிக அனுபவம் உள்ளவன், காரணம் அவன் காலகாலமாக இருப்பதுதான். இந்த அனுபவம் மனிதனுக்கு எப்படி துர் ஆலோசனைகளைக் கொடுத்து அவனை இடறச் செய்யலாம் என்று திட்டமிட அவனுக்கு உதவுகிறது, மாத்திரமல்ல ஒரு மனிதன் செய்யும் தவறின் காரணமாக அவனுடைய மூன்றாம் நான்காம் தலைமுறை வரைக்கும் அந்த தவறின் நிமித்தம் அவனுடைய சந்ததியினரை ஆளுகை செய்ய அவனால் முடிகிறது.


பிசாசின் பலவீணங்கள்
இப்படிப்பட்ட ஒருவனான பிசாசை ஒருமனிதன் மேற்கொள்வது என்பது முடியாத காரியம் ஆகும். திறமையும், பலமும், அனுபவமும் உள்ள பிசாசிற்கு சில பலவீணங்களும் உள்ளன அவைகளைக் குறித்து சுருக்கமாகப் பார்க்கலாமா?

சர்வவியாபி அல்ல‌
பிசாசு எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறவன் அல்ல அவன் ஒரு ஆள்த்துவம் உள்ள ஒருவன் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மட்டுமே அவனால் இருக்க முடியும், ஆனால் அவனுடைய தூதர்களான ஒரு கூட்டத் தூதர்கள் உலகமெங்கும் நிறைந்திருக்கிறார்கள், அவர்கள் எஜமானனின் செயல்களைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள்.


காலங்களை பிசாசினால் அறிய முடியாது
பிசாசினால் இந்த நேரத்தில் இது நடக்கும், அது நடக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது ஊகங்கள் அடிப்படையில் தான் வேலைசெய்ய முடியும்.


மனிதனை இயக்க முடியாது
தவறுகளையும், பாவங்களையும் செய்யும் படிக்கு பிசாசினால் ஒரு மனிதனைத் தூண்ட மட்டுமே முடியும், ஆனால் அவனை இயக்க முடியாது, ஒருமனிதனுக்கு திரும்பத் திரும்ப ஒரு ஆலோசனை கொடுக்கப்படும் என்றால் அந்த மனிதனுடைய ஆழ்மனதில் அது பதிந்து தன்னுடைய இயல்பிலேயே அதைச் செய்ய ஆரம்பித்து விடுவான். இப்படித்தான் பிசாசு மனிதனை இயக்க முடியுமே தவிர அவனை உள்ளிருந்து இயக்க முடியாது

இந்தனை வல்லமை நிறைந்த பிசாசானவன் நம்முடைய அன்றாட செயல்களிலும், நினைவுகளிலும் கலந்து நம்மை பல்வேறு இடங்களில் இடமறிக்கிறான். இந்த சாத்தானின் தந்திரங்களிலிருந்து நம்மால் வெளியே வரமுடியுமா? அல்லது வாழ்நாளெல்லாம் அவனுக்கு அடிமையாக மட்டுமே நாம் வாழமுடியுமா? என்ற கேள்வி உங்கள் மனதில் தோண்றலாம்.

இதற்கான விடை அவனுடைய தந்திரங்களிலிருந்து வெளியே வரமுடியும் என்பதே பதில், அது எப்படி? என்ற கேள்விக்கு பதிலை கொஞ்சம் பொறுத்திருந்து அறிந்து கொள்ளுங்களேன், அதற்கு முன்னதாக அவனுடைய தந்திரங்களில் சில நிஜ அனுபவங்களை நாளைக்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் காத்திருங்கள்

Post a Comment

0 Comments