Header Ads Widget

Responsive Advertisement

சாத்தானின் தந்திரங்கள் (பாகம் 2)

அன்பானவர்களே படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத் தொடரில் கடந்த பதிவில் சாத்தானின் தந்திரங்களில் மனிதனின் ஒரே எதிரியான சாத்தானின் பலங்கள் பலவீணங்களை அறிந்துகொண்டோம், அதிலும் குறிப்பாக சாத்தான் ஒரு மனிதனை வெளியே இருந்துதான் இயக்க முடியும் என்று சொல்லியிருந்தேன். ஆனாலும் சாத்தானால் பீடிக்கப்படும்போது சாத்தான் நம்மை இயக்க முழுமையாகக் கட்டுப்படுத்தி இயக்க முடியும்.

நான் கல்லூரியில் படித்த நாட்களில் மந்திரம் மாந்திரீகம் ஆகியவைகளில் ஈடுபட்டிருக்கிறேன், என் பாதுகாப்பை வேண்டி என்னுடைய ஆயுள் சக்கரம், மற்றும் வேறு சிலவற்றை பாம்பின் ஆவியிடம் ஒப்படைத்தது உண்டு, அப்படிப்பட்டதான நாட்களில் என்னுடைய சமாதாணம் முழுமையாகத் திருடப்பட்டது, எங்கே போனாலும் வெறுமை எதையோ இழந்தது போன்ற உணர்வு, சமாதாணத்தை எங்கே தேடியும் கிடைக்கவில்லை, இந்த மனச் சோர்வு நிலையில் தற்கொலைதான் ஒரே முடிவு என்ற முடிவுக்கும் வந்துவிட்டேன்.

பிசாசுகளுடனும் துர் தேவதைகளுடனும் நாம் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் அப்போதைக்கு பிரச்சனையிலிருந்து விடுதலையானது போன்ற உணர்வுகள் உண்டாகலாம் ஆனால் அது உண்மையில்லை பிசாசுக்கு நாமே அடிமை சாசனம் எழுதிக்கொடுப்பது போன்றது ஆகும்

மந்திரங்கள் தந்திரங்கள் போன்றவற்றில் நம்மை உட்படுத்திக் கொள்வது என்பது பிசாசை நண்பனாக அழைப்பது ஆகும், நீங்கள் நன்மைக்காக அப்படிச் செய்வதாக இருந்தாலும் அதினால் விளையப்போவது தீமையே என்பதை நினைவில் கொள்ளுங்கள், நீதிக்கும் அநீதிக்கும் எப்படிச் சம்பந்தம் இல்லையோ அப்படியே சாத்தானுக்கும் நன்மைக்கும் சம்பந்தம் இல்லை என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்


அடுத்ததாக மற்றவர்கள் நமக்காகச் செய்யும் மந்திரங்கள் மாயங்கள் எனக்குத் தெரிந்த ஒருவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார், ஆனால் அவருக்கு விரோதமாகச் செய்யப்பட்ட மந்திரங்கள் பில்லிசூனியங்கள் அவரை ஆட்கொள்ள ஆரம்பித்து அவரருடைய மகிழ்ச்சியைக் கெடச் செய்தார் மற்றொருவர், இதனால் தான் செய்வது இன்னதென்று அறியாமல் மனம் போன போக்கில் வாழ்ந்து பித்துப் பிடித்தவர் போல ஆகி விட்டார். இப்படி நமக்கு விரோதமாகச் செய்யப்படும் சாத்தானின் உடன்படிக்கையிலிருந்து நம்மால் தப்பிக்க முடியுமா? மற்றும் நமக்கு நாமே சாத்தானோடு செய்து கொண்ட ஒப்பந்தங்களை முறித்தெரிய முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என்பதே பதிலாக இருக்கும்.

விக்கிரக வழிபாடுகள் துர்தேவதை வழிபாடுகள் சந்திர சூரிய வழிபாடுகள் யாவுமே சாத்தான் வழிபாடுகள் ஆகும். இப்படிப்பட்டவைகளோடு நாம் உடன்படிக்கை செய்து கொண்டாலும் சாத்தான் நம்மை முழு வல்லமையோடு ஆளுகை செய்யமுடியும் என்பதை மனதில் நிறுத்துங்கள்,

சாத்தான் நம்மை எந்த வழியில் நெருங்குவான்?
பொதுவாக தண்ணீர் தேங்கியிருந்தால் அங்கே கொசுக்களின் பெருக்கமும் அதிகமாக இருக்கும், குப்பைகள் பெருகியிருக்கும் இடத்தில் ஈக்கள் அதிகமாக இருக்கும், அதுபோல பாவங்கள் அதிகமாக் இருக்கும் இடத்தில் சாத்தானின் ஆளுகை அதிகமாக இருக்கும்.

ஆம் நாம் பாவம் செய்யும் போது சாத்தானுக்கு வழியை ஆயத்தப்படுத்தி தீமைக்கு நம்மை நாமே உட்படுத்திக் கொள்கிறோம். நம்மிடத்தில் அதிகமான பாவங்கள் இருக்குமானால் அதினால் உண்டாகும் எதிர்மறைச் சாபங்களுக்கு நாம் பாத்திரவானாய் இருக்கிறோம் அந்த சாபத்திற்கு அதிபதி சாத்தான் உடனே தீமைகளை நமக்கு அனுமதிக்க ஆரம்பிப்பான்,

நீயூட்டனின் மூன்றாம் விதி
சமாதாணத்தைப் பறிப்பான், நோய்களையும், துர்மரணங்களையும், மோசமான சோதனைகளையும் கொடுத்து நம்மை சீரழிக்க ஆரம்பிப்பான். நாம் செய்யும் அத்தனை பாவங்களுக்கும் சரியான தீமையை நமக்கும் அனுமதிப்பான். ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்ற நீயூட்டனின் விதி  பாவத்துக்கும், தீமைக்கும் சரியாகப் பொருந்தும்.

பரிசுத்தமாக வாழ்ந்தால் நமக்கு எதிராகச் செய்யப்படும் மந்திரங்கள் செயல்படுமா?
நிச்சயமாக செயல்படும், பரிசுத்தமாக வாழ்வது சாத்தானின் வல்லமையிலிருந்து தப்பிக்க ஒரு வழியே தவிர பாதுகாப்புக் கவசம் கிடையாது, அப்படியானால் சாத்தானின் தந்திரங்களிலிருந்து எப்படி அதிலிருந்து தப்பிப்பது? பாவம் என்றால் என்ன பரிசுத்தம் என்றால் என்ன? இந்த வினாக்களுக்கான விடையை அடுத்த பதிவில் பார்க்கலாம் காத்திருங்கள்

Post a Comment

0 Comments