Header Ads Widget

Responsive Advertisement

பாவம் என்றால் என்ன? மனிதனில் பாவம் எங்கு பிறக்கிறது?


அன்பானவர்களே, இந்தப் படைப்பின் இரகசியங்கள் கட்டுரைத் தொடரில் மனிதனின் ஒரே எதிரியான சாத்தானின் பலம் பெலவீணம் ஆகியவற்றோடு பாவம் இருக்கு இடத்தில் சாத்தானின் ஆளுகையும் இருக்கும் என்பதை அறிந்துகொண்டோம், அப்படிப்பட்ட சாத்தானின் தந்திரங்களிலிருந்து விடுபட நாம் முதலில் பாவங்களிலிருந்து விடுதலையாகவேண்டும். பாவம் என்பதே என்னவென்று தெரியாத நிலையில் பாவத்திலிருந்து விடுதலையாவது எப்படி? ஆகவே பாவம் என்றால் என்ன? அந்தப்பாவம் மனிதனில் எங்கே உருவாகிறது? பாவம் செய்யாமல் இருக்க என்ன செய்யவேண்டும் ஆகியவைகளைக் குறித்து இன்று சிந்திக்கலாம்.

நம்மில் அனேகர் நான் பாவமே செய்வதில்லை, நான் நீதிமான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் இது உண்மையல்ல ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள இயல்பான சுபாவம் பாவம் செய்வது ஆகும். நாம் நம்மை அறியாமலேயே அன்றாடம் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பாவம் செய்கிறவர்களாக இருக்கின்றோம். நாம் பாவமே செய்வதில்லை என்று நாம் நினைப்போமானால் அது ஒரு சாத்தானின் தந்திரம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும் அதற்கு முன்னால் பாவம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்

பாவம் என்றால் என்ன?
நீதிக்கு எதிராக செய்யப்படும் அநீதி அனைத்துமே பாவம் தான், சட்டத்தை மீறுவது, நன்மை செய்ய முடிந்தும் நன்மைசெய்யாது இருத்தல், தீமையான நோக்கம், பாரபட்சம் காட்டுதல் மிகுதியாகப் பேசும்போது சொற்களின் மிகுதியில் பாவம் தெரியும், இவை அனைத்துமே வெவ்வேறு பரினாமங்களில் சொல்லப்பட்டாலும் மிக எளிமையாகச் சொல்வதென்றால் மன்சாட்சிக்கு விரோதமான செயல்கள் அனைத்துமே பாவம் என்று கொள்ள்லாம்.

பாவம் பிறந்தது எப்போது?
இந்த உலகத்தின் முதல் பாவம் எது என்று ஆராய்வது நாம் பாவம் செய்யும் போது யாரோடு கூட்டளியாக மாறுகின்றோம் என்று நாம் நிதானிக்க உதவிசெய்யும், தேவதூதர்ளும் பிசாசும் என்ற கட்டுரையில் லூசிபர் என்ற தூதன் தன் அழகின் நிமித்தம் பெருமையடைந்து இந்த உலகத்தை உண்டாக்கிய தேவனுடைய உண்ணதங்களுக்கு ஏறுவேன் என்று தன்னை இறைவனுக்கு நிகராக உயர்த்திக் கொள்ள நினைத்த மாத்திரத்தில் அவனுடைய பெருமையின் நிமித்தமாக பாவம் உண்டானது, அவன் பூமியில் விழத்தள்ளப்பட்டதையும் அதன் பின்னால் நிகழ்ந்ததையும் அதற்குப் பின் வந்த கட்டுரைகள் மூலமாக அறிந்து கொண்டோம், அப்படியே அந்தப் பாவத்தில் விழும் ஒவ்வொரு மனிதனும் சாத்தானுடைய பங்காளி ஆகின்றான், ஒரு தூதன் தன்னை இறைவனுக்கு நிகராக உயர்த்திக் கொள்ள நினைத்த மாத்திரத்தில் பூமிக்கு தள்ளப்பட்டதையும், அதனால் பூமியில் ஏற்பட்ட சேதங்களையும் குறித்து அந்தக் கட்டுரையில் நாம் பார்த்தோம். 

பாவத்தை பிறப்பித்தவன் விழுந்ததால் பூமியில் அத்தனை பெரிய ஜீவராசிகள் மரித்திருக்குமானால், அவனோடு கூட்டு சேர்ந்து பாவம் செய்யும் நம்முடைய சந்ததியார் வாழ்க்கையில் எத்தனை திரளான தீமைக்கு நாம் காரணமாக இருக்கப் போகிறோம் என்பதை ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள், 

மனிதனில் எங்கே பாவம் உண்டாகிறது?
பாவம் என்பது வெளியரங்கமாவது செயலில் தான் என்பது நமக்குத் தெரியும், ஆனால் அந்த செயல்களுக்கு முன்னாலேயே பாவம் பிறந்துவிடுவதாக பைபிள் சொல்லுகிறது, அப்படியெனில் அது எங்கே பிறக்கிறது என்று நமக்குத் தெரியாவிட்டால் நாம் அதை கட்டுக்குள் கொண்டுவர முடியாது, ஆகவே அதை நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும், மனிதனின் மனதில் தான் பாவம் முதலில் உருவாகிறது, அந்த நினைவுக்கு நாம் இடம் கொடுக்கும் போது சாத்தான் உள்ளே நுழைகிறான். அந்த நினைவுக்கு உரமிட்டு தண்ணீர் ஊற்றி வளர்க்கிறான், அந்தப் பாவத்தை செய்வதால் உண்டாகும் தீமையை நன்மையாக நமக்கு மாற்றிப் பொய்சொல்லி ஊக்கப்படுத்துகிறான், 

ஒருநாள் அந்தப்பாவம் வெளியறங்கமாகிறது, தீமையில் வரும் பலன் அந்த மனிதனை வாதிக்கிறதோடு மாட்டுமல்லாமல் அவன் சந்ததிகளையும் பாதிக்கிறது, 

மனதில் தீய நினைவுகள் தோண்றினாலே பாவமா?
ஆம், ஒரு பாவம் செயல்வடிவம் பெறுவதற்கு முன்னால் மனதில் கருவுறுகிறது, அந்த நினைவுகளுக்கு இடம் கொடுத்து அதைத் செயவது நன்மையானது என்று நம்முடைய மனதுக்கு ஆலோசனை கொடுப்பது சாத்தான், நம்முடைய மனம் அந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்ளும் போது சாத்தானின் சதித்திட்டத்துக்கு நம்மை விற்றுப்போடுகிறோம், ஆகவே நம்முடைய மனதில் தீமையான எண்ணங்கள் உண்டாகும் போதே அதை மனதைவிட்டு அகற்ற வேண்டும் தொடந்து இடம்கொடுத்தால் திருடனை வெற்றிலை பாக்கு வைத்து வீட்டிற்கு அழைப்பதற்கு சமமாகிவிடும்,.


மனதில் தோண்றும் தீய எண்ணங்களால் உண்டாகும் சில பாவங்களின் பட்டியல்

1) விபச்சாரம்

2) கடவுளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கல்லுக்குக் கொடுக்கச் செய்யும் தந்திரமான விக்கிரக ஆராதனை

3) காம நினைவுகளாலும், தீய நினைவுகளுக்கு அதிகமாக இடம் கொடுப்பதாலும் செய்யப்படும் சுயபுணர்ச்சி

4) ஓரிணச் சேர்க்கை

5) திருடுதல் பிறருடையதை அபகரித்தல்

6) பொருளாசை, பேராசை

7) குடிவெறி, களியாட்டுகள், போதை வெறி

8) கொள்ளையடித்தல்

9) பில்லிசூனியம்

10) பகைமை பாராட்டுதல், பழிவாங்குதல்,

11) விரோதங்கள், வைராக்கியம் பாராட்டுதல்

12) கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள்

13) பொறாமைகள்

14) கொலைகள்

15) தகாத உறவுகள், தன் துனையை ஏமாற்றிய தவறான உறவுகள்

என்று இன்னும் எத்தனை எத்தனையோ உள்ளது. இந்தப்பட்டியல் முழுமையானது அல்ல, முன்பே சொன்னது போல மனசாட்சிக்கும் சட்டத்துக்கும் விரோதமானது அனைத்துமே பாவங்கள் ஆகும். நம்மில் இத்தகைய பாவங்கள் இருக்கிறதா என்று நம்முடைய மனதையும் நினைவுகளையும் ஒருமுறை கூட ஆராய்ந்து பார்ப்போம், அப்படிப்பட்டவைகள் இருந்தால் நம்முடைய வாழ்க்கையிலும் குடும்பத்தினரின் வாழ்க்கையிலும் சாத்தானின் ஆளுகையை நாம் அனுமத்தித்திருக்கிறோம், நம்முடைய துன்பத்திற்கெல்லாம் வேர் இந்தப் பாவங்களே என்பதை உணர்ந்து, அத்தகைய தீய நினைவுகளை நம்மை விட்டு அகற்றுவோம்.பாவத்தின் விளைவுகள்,
நாம் ஏற்கெனவே பார்த்தது போல பாவம் என்பது சாத்தானின் வல்லமைக்கான திறவுகோள் ஆகும்,. அதோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக வேறுசில தீமைகளும் உண்டு அவை

1) நம்மை உண்டாக்கினவர் பரிசுத்தர், நம்முடைய பாவங்களால் நாம் அவரன்டை சேரமுடியாமல் கடவுளின் அன்பை விட்டுப் பிரிக்கப் படுகிறோம்

2) கடவுளின் பாதுகாப்பு, உதவி, விடுதலை ஆகியவை நமக்குக் கிடைக்காது

3) உள்ளத்தில் சமாதாணம் இருக்காது

4) நாம் எங்கே போனாலும் எத்தனை வசதிகள் வந்தாலும் அந்த பாவத்தை வைத்துக் கொண்டு பிசாசு நம்மை குற்றம் சாட்டுவான், நம்முடைய மனசாட்சியும் நம்மை உறுத்திக் கொண்டே இருக்கும்

5) பாவத்தின் விளைவாக உடலிலும் மனதிலும் நோய்கள் உண்டாகும்

6) ஒருவன் செய்யும் பாவங்கள் அவனுடைய மூன்றாம் நான்காம் தலைமுறையினர் வரை தொடந்து சென்று பாதிக்கும்

7) எல்லாவற்றிலும் மிகக் கொடுமையாக பாவம் செய்கிறவர்களுடைய ஆன்மா சாத்தோனோடு கூட நித்தியமான ஆக்கினையில் பங்கு கொள்ளும் (இந்த விளைவைக்குறித்து வரும் கட்டுரைகளில் விரிவாகக் காண்போம்)

பாவம் செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
கடவுள் நம்முடைய மனதில் தன்னுடைய சட்டங்களை எழுதியிருக்கிறார், அது நம்முடைய மனசாட்சி வழியாக நாம் வழி மாறும்போது நம்மை அது கண்டித்து உரைக்கும் போது அந்த தீய நினைவை விட்டு வெளியே வந்துவிட வேண்டும் அதோடு கூட நம்முடைய தீமையான எண்ணங்களை கடவுளிடத்தில் சொல்லி மன்னிப்புக் கேட்டு இனி அப்படிப்பட்ட என்னங்களை நான் அனுமதிக்கமாட்டேன் என்றும் உறுதி கூறவேண்டும்


இப்படியெல்லாம் செய்தால் சாத்தானால் நம்மை நெருங்க முடியாதா?
அதுதான் இல்லை சாத்தான் நம்மை பரிசுத்தமாக வாழவிடாமல் இருக்க நிச்சயமாக சில உபத்திரவங்களை அனுமதிப்பான், போராடுவான், அதைக்குறித்து விரிவாக எந்தெந்த வகையில் போராடுவான்? அதில் விழாமல் தப்பிப்பது எப்படி? ஒருவேளை சாத்தானின் சதிவலையில் விழுந்துவிட்டால் மரித்தபின் நம் ஆன்மாவுக்குக் கிடைக்கும் தண்டனை என்ன போன்றவற்றை அடுத்து வரும் பதிவுகளில் அறிந்துகொள்ளாலாம் காத்திருங்கள்

Post a Comment

1 Comments

 1. கட்டுரை மிக அருமை நண்பரே. ண, ன எழுத்துப்பிழைகளை திருத்தினால் மிக நல்லது.
  பெலவீணம் - பலவீனம்
  ஓரிணச் சேர்க்கை - ஓரினச் சேர்க்கை
  துனையை - துணையை
  சமாதாணம் - சமாதானம்
  என்னங்களை - எண்ணங்களை

  ReplyDelete