Header Ads Widget

Responsive Advertisement

En arul natha | என் அருள் நாதா இயேசுவே.. ‍கல்வாரி பாடல்வரிசை Kalvari songs Video & Lyrics

என் அருள் நாதா இயேசுவே
சிலுவைக் காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்

என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன்

கை , தலை , காலிலும் இதோ
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ
முள் முடியும் ஒப்பற்றதே

சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்

Post a Comment

0 Comments